Monday, 3 April 2017

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின்  சான்றிதழ் வழங்கும் விழா
 தேவகோட்டை  - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைநிலை பள்ளியில்  மாணவர்களுக்கு மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


                 விழாவில் ஆசிரியை  செல்வமீனாள்  வரவேற்புரை வழங்கினார். தேவகோட்டை அரண்மனை அஞ்சலக தபால் அதிகாரி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை   தாங்கினார் . விழாவில்   அஞ்சல் துறை காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன்   ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின்  சான்றிதழ்களை    வழங்கி சிறப்புரையாற்றினர்.,  மத்திய நீர் வாரியம் சார்பில் நீரை சேமிப்போம்,வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பள்ளி அளவில் முதல் பரிசினை பரமேஸ்வரியும்,இரண்டாம் பரிசினை பிரவீணாவும் ,மூன்றாம் பரிசினை காயத்ரியும்  பெற்றனர். விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் அஞ்சல் துறையை சார்ந்த கதிரேசன்,வெங்கடேசன்,அரவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.
 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைநிலை பள்ளியில்  மாணவர்களுக்கு மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின்சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அஞ்சல் துறை காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன்   ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின்  சான்றிதழ்களை    வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment