Saturday, 26 November 2016

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா
வாழ்வியல் முறைகளும்,நோய்களும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்பித்தல்
செட்டிநாடு வீடுகளை பழமை மாறாமல் பாதுகாத்தல் தொடர்பான ஆய்வு கட்டுரை சமர்பித்தல்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்று சான்றிதள் மற்றும் மெடல் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Wednesday, 23 November 2016

வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர்  
சாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல ! வாழ்க்கையின் வழி !
போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணப்படாதீர் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேசினார்.

Tuesday, 22 November 2016

பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழ் எளிமையாக கற்பித்தல் என்பது தொடர்பான யு tube வீடியோவை இன்று பள்ளியில் தொலைகாட்சி வாயிலாக ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் விளக்கி எடுத்து கூறியபோது 


சுட்டி விகடனின் ரோல்ஸ் ராய்ஸ் கார்
சுட்டி கிரியேசன்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சுட்டி விகடன் இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .
இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களே மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

ராசியான பள்ளிக்கூடம் ,நல்ல பள்ளிக்கூடம்

இந்நாள் மாணவர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள் 

Monday, 21 November 2016

எல்.ஈ.டி., எல்.சி.டி.,என்பது என்ன ?
தொடர் இணைப்பு ,பக்க இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது ?

அறிவியல் நேரடி விளக்கம் மூலம் செய்து காண்பித்தல்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


Saturday, 19 November 2016

                                                    உலக கழிவறை தினம் 

இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு  கழிவறை கோப்பை மூலம்  கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

Friday, 18 November 2016

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 

Wednesday, 16 November 2016

மத்திய அரசின் காரைக்குடி மத்திய  மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு பாராட்டு

மத்திய அரசின் காரைக்குடி மத்திய  மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


Saturday, 12 November 2016

அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்
விவாசய கல்லூரி டீன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று டீன் பேபி ராணி பேசினார்.

Friday, 11 November 2016

பழசுக்கு புதுசு – மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவது எப்படி ?

மாணவர்களிடம் விளக்குதல்

தேவகோட்டை- தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.

Wednesday, 9 November 2016

மத்திய நிலத்தடி நீர் வாரியம் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 
                              
                 தேவகோட்டை -    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Saturday, 5 November 2016

 கந்தர் சஷ்டி விழாவில் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் 
தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

                       71 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்  கலை நிகழ்ச்சிகள் 
 வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம் ,ஓம் சரவணபவ நடனம்,முருகன் அடிமை பேச்சு,செல்ல குழந்தைகள் நடனம்,லார்டு முருகா ஆங்கில பேச்சு ,மாரியம்மன் கரக நடனம்,நம்பிக்கை பேச்சு,அலை பேசியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணம் மௌன நடிப்பு,தி டிஸ் ஹானஸ்ட் ஜட்ஜ் ஆங்கில நாடகம் ,உழவர் நடனம்,யோகம் தரும் யோகா , நிலவுக்கே சென்று வந்தது போன்ற நிலவு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 6ம் வகுப்பு ராஜி,7ம் வகுப்பு ஜெனிபர் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Friday, 4 November 2016

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....

கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 05-11-2016

நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.

நாள் : 05-11-2016
நேரம் : மாலை 6-00 மணி 
 
 

Thursday, 3 November 2016

திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர் என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர் என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

மனிதர்களில் நான்கு வகை என்கிற தலைப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி கந்த சஷ்டி விழாவில் பேசிய வீடியோ காட்சி

மிகபெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவிகள் இன்று மாலை 5.30 மணி அளவில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பேச உள்ளனர்.
1) க.ராஜி
பொருள் : வெற்றி நம்கையில்

2 ) மு.தனலெட்சுமி
பொருள் ; திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர்
3 ) மு.ராஜேஸ்வரி
பொருள் : மனிதர்களில் நான்கு வகை

அனைவரும் வருக.

Wednesday, 2 November 2016

சுட்டி விகடனின் அழகான வீடு  

சுட்டி கிரியேசன்ஸ் அழகான வீடு  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

 

          சுட்டி விகடன்  இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான வீடு  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் இறைவணக்க பாடல் பாடிய காட்சி 
 
இன்றைய தினகரன் பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான செய்தி கலர் படத்துடன் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.
 Displaying image.png

ஜெர்மன் சுபாஷினி அவர்கள் தனது முகநூலில் பள்ளியை பாராட்டுதல் மற்றும் பள்ளிக்கு விரைவில் வருகை தருவதை அன்புடன் வரவேற்றல்


ஜெர்மனி தமிழ் மரபு அறக் கட்டளை

செயலாளரும்,கல்வெட்டு ஆராய்ச்சியாளரு

மான  மலேசியாவை சார்ந்த சுபாஷினி

ட்ரெம்மல்  அவர்கள் சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்

அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளி

செயல்பாடுகளை பாராட்டி    தனது

முகநூலில் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :

             

கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் அரசு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் மிக சுறுசுறுப்பனாவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களைக் கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள். ஒருவர் விட்டு ஒருவர் என ஆர்வத்துடன். இவர்களின் மேல் ஏற்பட்ட ஆரவத்தினால் ஜெர்மனி திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். இந்த ஆண்டும் இந்த மாணவர்களைச் சந்திக்க 1/2 நாள் எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவ்ர்கள். அருமையான ஆசிரியர்கள். குறிப்பாகத் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் மிகப் பாராட்டுதலுக்குறியவர்.”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் ஜெர்மன் சுபாஷினி அவர்கள்  பதிவிட்டுள்ளார்.



பள்ளியின் சார்பாக ஜெர்மன் சுபாஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி.
உங்களின் பார்வைக்கு முகநூல் பதிவு.