மத்திய அரசின் காரைக்குடி மத்திய மின்
வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு பாராட்டு
மத்திய அரசின் காரைக்குடி மத்திய மின்
வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தேவகோட்டை – மத்திய அரசின் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி ) பவள விழாவில்
அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி
பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதர்க்கும்,
பள்ளி தலைமை ஆசிரியர் கௌவரவிக்கபட்டதர்க்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மத்திய அரசின் காரைக்குடி
மத்திய மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி )
பவள விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களிடையிலான அறிவியல்
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சமுதாயம் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்கள்
மற்றும் மாணவர்களிடையில் தொடர்ந்து நிகழ்த்தி வருவதை பாராட்டி மின் வேதி மையத்தின்
இயக்குனர் (பொறுப்பு ) மற்றும் முதன்மை விஞ்ஞானி செய்யது ஆசிம் தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கதுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவவித்தார் .
இப்பள்ளி
மாணவ,மாணவியர் விக்னேஷ் கழிவு பொருளில் இருந்து உபயோகமான பொருள் டார்ச் விளக்கு,பறவை
ஆகியவற்றையும் , ராஜேஷ் விண்கலமும்,ஜெகதீஸ்வரன் பெரிஸ்கோப் , கலைடாஸ்கோப்
ஆகியவற்றையும்,ராஜேஸ்வரி பன்முக எதிரொலிப்பு,மூளை ,உணவு சங்கிலி
ஆகியவற்றையும்,நித்ய கல்யாணி தூய்மை நகரம், ராஜி பாதுகாப்பான புகை வண்டி ,
கார்த்திகேயன் சோழர் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் வீடு , காவியா மனதில் நினைத்த எண்ணை
கண்டுபிடித்தல் மாதிரியையும்,ஜீவா மங்கல்யான் மாதிரியையும் செய்து விளக்கி கூறினார்கள்
. சிறப்பு விருந்தினர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் என்.ராமசந்திரன்
அறிவியல் மாதிரிகளை பார்வையிட்டு வாழ்த்து தெரவித்தார்.மாணவ,மாணவியர் சிக்ரி
விஞ்ஞானிகள் ரவிச்சந்திரன்,ராஜேந்திரன் ஆகியோருடன் கலந்துரையாடி தங்கள்
சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
மாணவ,மாணவியர்
காரைக்குடி சிக்ரி வளாகத்தில் உள்ள உலோக அரிமானம்,மின்கலங்கள்,குளோரோ அல்கலி,மின்
உலோகவியல்,மின் நீர்ம உலோகவியல்,மின் கரிம வேதியியல்,மின் வேதியியல் கிரியா
ஊக்கித் துறை,மின் வேதியியல் அடிப்படையிலான மாசுக் கட்டுபாட்டுதுறை ,நோய்
சம்பத்தப்பட்ட கிருமிகளை ஆராயப் பயன்படும் நவீன சென்சார்கள் ( பயோ சென்சார்கள் )
மற்றும் மின் முலாம் பூசுதல் ஆகிய பல்வேறு துறைகளில் கடந்த 60 ஆண்டுகளுக்கும்
மேலாக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர்.மிகுந்த
மகிழ்ச்சி அடைந்தனர்.வாழ்க்கையில் இந்த வயதில் சிக்ரி வளாகத்தை பார்வையிட்டதும்,அறிவியல்
கண்டுபிடுப்புகளை நேரில் பார்த்து விளக்கம் பெற்றதும்,மத்திய அரசின்
விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றதும் மிகுந்த
சந்தோசத்தை ஏற்படுத்தியதுடன் ,வரும் காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை
உருவாக்கும் விஞ்ஞானியாக வருவோம் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.தேவகோட்டையில்
இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் இக்கண்காட்சியில்
கலந்து கொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம் ; மத்திய அரசின் காரைக்குடி
மத்திய மின் வேதியியல் ஆய்வகம் ( சிக்ரி )
பவள விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களிடையிலான அறிவியல்
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சமுதாயம் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்கள்
மற்றும் மாணவர்களிடையில் தொடர்ந்து நிகழ்த்தி வருவதை பாராட்டி மின் வேதி மையத்தின்
இயக்குனர் (பொறுப்பு ) மற்றும் முதன்மை விஞ்ஞானி செய்யது ஆசிம் தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கதுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவவித்தார் .
No comments:
Post a Comment