Friday, 18 November 2016

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 

 

        

   தொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆணைப்படி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பாராட்டும் செயல்பாட்டுக்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள் 2015ம்  ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் ஓய்வறியா கல்வி பணியாற்றியதை பாராட்டி பள்ளியின் சார்பாக தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி மற்றும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணமாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் பாராட்டி  விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

          
            இந்த பாராட்டு விழா ஜனவரி மாதம் 4ம் தேதி 2016ம் ஆண்டு நடைபெற்றது.இவ்விழா தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உதவி தொடக்க கல்வி அலுவலரின் தலைமையில் விடுமுறை எடுக்காமல் ஓய்வறியா கல்வி பணியாற்றிய ஆசிரியை பாராட்டி விருது வழங்கப்பட்டது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது  ஆகும்.



ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியை 
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

                    விழாவிற்கு வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2015 ஒரு ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல்அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர் முத்து மீனாளை , குடும்ப சூழ்நிலைகள் அனைத்திலும் கருத்தில் கொண்டு அதனுடன் பள்ளிக்கும் விடுப்பு எடுக்காமல் வந்துள்ளதை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைமை தாங்கி  தேவகோட்டை உதவி தொடக்கி கல்வி அலுவலர் லெட்சுமி தேவி விருதினை  வழங்கி பேசுகையில், இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தின் பல்வேறு வேலைகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விடுமுறை எடுக்கமால் ஆண்டு முழுவதும்  ஓய்வறியா கல்வி பணியாற்றிய ஆசிரியைக்கு இந்த விருது வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும், ஆசிரியைக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கவும், தொடர்ந்து அவரது கல்விப் பணி சிறக்கவும் ,குடும்பத்தினர் அனைவரும் நன்றாக வாழவும் வாழ்த்துகிறேன் என்றும் பேசினார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் வாழ்த்தி பேசுகையில்,அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் ஆசிரியை எவ்வித விடுப்பும் எடுக்காமல் ஒரு குறிக்கோளுடன் குடும்பத்தையும் கவனித்து , அத்துடன் அரசு விடுமுறை நாட்களிலும் திருச்சி,சென்னை போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்றது,விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் பயற்சி கொடுத்து அழைத்து சென்றதும் பாராட்ட பட வேண்டிய செயல் ஆகும் என்று பேசினார். விருது பெற்ற ஆசிரியை முத்து மீனாள் ஏற்புரை வழங்கினார்.ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.ஆசிரியை முத்து லெட்சுமி விழாவினை தொகுத்து வழங்கினார்.

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியை முத்து மீனாள்க்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி விருது வழங்கினார். உடன் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.


No comments:

Post a Comment