பழசுக்கு புதுசு – மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்
பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவது எப்படி ?
மாணவர்களிடம் விளக்குதல்
தேவகோட்டை- தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய
நோட்டுக்களை பெறுவது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவர் விஜய் அனைவரையும்
வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி புதிய ரூபாய்
500,1000 ...எப்படி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி சொன்னதுடன் இது
தொடர்பான முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்ட தகவல்கள்
அடங்கிய நோட்டிசும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக
வழங்கப்பட்டது.பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம்
எனவும் எடுத்து சொல்லப்பட்டது.பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும்
என்கிற தகவலும் ,ஆனால் அதனை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்கிற
தகவலும் தெளிவாக பெற்றோர்களிடம் சென்று சொல்ல வேண்டும்,வீட்டை சுற்றி உள்ள
அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற தகவல்களை ஆசிரியர் ஸ்ரீதர் எடுத்து
சொன்னார்.நிறைவாக மாணவி அல்நிஸ்மாபேகம் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய
நோட்டுக்களை பெறுவது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.இது
தொடர்பான முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்ட தகவல்கள்
அடங்கிய நோட்டிசும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக
வழங்கப்பட்டது
No comments:
Post a Comment