Wednesday, 2 November 2016

ஜெர்மன் சுபாஷினி அவர்கள் தனது முகநூலில் பள்ளியை பாராட்டுதல் மற்றும் பள்ளிக்கு விரைவில் வருகை தருவதை அன்புடன் வரவேற்றல்


ஜெர்மனி தமிழ் மரபு அறக் கட்டளை

செயலாளரும்,கல்வெட்டு ஆராய்ச்சியாளரு

மான  மலேசியாவை சார்ந்த சுபாஷினி

ட்ரெம்மல்  அவர்கள் சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்

அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளி

செயல்பாடுகளை பாராட்டி    தனது

முகநூலில் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :

             

கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் அரசு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் மிக சுறுசுறுப்பனாவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களைக் கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள். ஒருவர் விட்டு ஒருவர் என ஆர்வத்துடன். இவர்களின் மேல் ஏற்பட்ட ஆரவத்தினால் ஜெர்மனி திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். இந்த ஆண்டும் இந்த மாணவர்களைச் சந்திக்க 1/2 நாள் எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவ்ர்கள். அருமையான ஆசிரியர்கள். குறிப்பாகத் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் மிகப் பாராட்டுதலுக்குறியவர்.”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் ஜெர்மன் சுபாஷினி அவர்கள்  பதிவிட்டுள்ளார்.



பள்ளியின் சார்பாக ஜெர்மன் சுபாஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி.
உங்களின் பார்வைக்கு முகநூல் பதிவு.



No comments:

Post a Comment