தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா
வாழ்வியல் முறைகளும்,நோய்களும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்பித்தல்
செட்டிநாடு வீடுகளை பழமை மாறாமல் பாதுகாத்தல் தொடர்பான ஆய்வு கட்டுரை
சமர்பித்தல்
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளி மாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்று சான்றிதள்
மற்றும் மெடல் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு
வந்தவர்களை
ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்
தலைமை
தாங்கினார்.இப்போட்டி திருப்பத்தூரில் தனியார் பள்ளி வளாகத்தில்
நடைபெற்றது.இப்போட்டியில் இரண்டு குழுக்களாக மொத்தம் பத்து மாணவர்கள்
இரண்டு
தலைப்புகளில் பங்கேற்றனர்.முதல் குழுவினர் பாரம்பரிய அறிவும்,நீடித்த
நிலைத்த
வளர்ச்சியும் என்கிற மைய கருத்தை அடிப்படையாக கொண்டு அழிந்து வரும்
செட்டிநாடு
வீடுகள் என்கிற ஆய்வு தலைப்பில் தனலெட்சுமி,கார்த்திகா,சின்னம்மா ள்,சக்தி,காவியா
ஆகியோர் ஆய்வு கட்டுரையும், இரண்டாவது குழுவினர் வாழ்க்கை முறையே வாழ்வாதாரம்
என்கிற மைய கருத்தினை எடுத்து கொண்டு வாழ்வியல் முறைகளும்,நோய்களும் என்கிற
தலைப்பில் கார்த்திகேயன்,ராஜி,சந்தியா,ரஞ் சித்,ராஜேஷ் ஆகியோரும் ஆய்வு கட்டுரையை
சமர்ப்பித்தனர்.இதற்காக மாணவர்கள் குழுவாக இணைந்து வீடு,வீடாக சென்று ஆய்வு
செய்து,பல நபர்களை பேட்டி எடுத்து இந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.போட்டிகளில்
பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல் வழங்கப்பட்டு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.தேவகோட்டையில் இருந்து இப்பள்ளி மாணவர்கள் மட்டுமே
இப்போட்டிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைவாக ஆசிரியை வாசுகி
நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளி மாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் பங்கேற்று சான்றிதள்
மற்றும் மெடல் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.உடன் பள்ளி தலைமை
ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் வழிகாட்டி ஆசிரியை முத்து மீனாள் உள்ளனர்.
No comments:
Post a Comment