Saturday, 19 November 2016

                                                    உலக கழிவறை தினம் 

இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு  கழிவறை கோப்பை மூலம்  கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.


                                           இந்நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.உலகில் கழிவறை இல்லாத டாப் -10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற தகவலும், கழிப்பறை பயன்படுத்தாத நாடுகளில் முதல் 10 இடத்தில் முதலாவதாக இந்தியா உள்ளது என்கிற தகவலும் மாணவர்களிடம் எடுத்து சொல்லப்பட்டது.மாணவர்கள் மத்தியில் கழிவறை கோப்பை காண்பிக்கப்பட்டு நேரடியாக கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விளக்கி சொல்லப்பட்டது.அனைத்து மக்களும் பல ஆயிரம் கொடுத்து செல் போன் வாங்குகின்றனர்.ஆனால் துய்மையாக இருக்க வேண்டிய கழிவறை பயன்பாடு செல்போன் பயன்பாடு அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லை.கழிவறை இருந்தும் பயன்படுத்தாத இடத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது கவலை தரக்கூடிய செய்தியாகும்.இதனை மாற்றி அனைவருக்கும் கழிவறை அமைத்து கொடுத்து தனி நபர் சுத்தம்,வீடு சுத்தம் ,தெரு சுத்தம்,ஊர் சுத்தம்,நாடு சுத்தம் என துய்மை இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் என மாணவர்களிடம் சுத்தம் தொடர்பாக விரிவாக எடுத்து சொல்லப்பட்டது.மாணவர்கள் சிலர் வீடுகளில் இன்னும் கழிவறை இல்லை என தெரிவித்தனர்.அவர்களிடமும் பெற்றோர்களிடம் சொல்லி விரைவில் கழிவறை கட்ட ஆவண செய்து சுகாதாரத்தை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.மாணவிகள் சின்னம்மாள் ,பரமேஸ்வரி,சக்தி,காயத்ரி,ராஜேஸ்வரி,ஜெனிபர் மாணவர்கள் செந்தில்,ஐயப்பன்,நந்தகுமார்,ஹரிஹரன்,ஈஸ்வரன்,கிஷோர்குமார்,பரத் ஆகியோர் துய்மை இந்தியா திட்டம் குறித்தும்,கழிவறைகள் தேவை குறித்தும் பேசினார்கள்.இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை, நோய்கள் இல்லாத சுகாதாரத்தை காத்திட கழிவறை அவசியம் என்கிற தலைப்பிலான உறுதிமொழியும் மாணவர்களால்  எடுத்துக்கொள்ளப்பட்டது.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு  கழிவறை கோப்பை மூலம்  கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

No comments:

Post a Comment