Tuesday, 12 July 2016

பள்ளியில் தினமலர் நடத்தும் அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு கட்டுரை போட்டி 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் நடத்தும் அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு கட்டுரை போட்டி நடைபெற்றது.



                                                     போட்டியில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தி கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள செய்தனர்.தினமலர் நாளிதழ் மாணவர்களின் முன்னேற்றத்தில் பல்வேறு வகையில் உதவி செய்து வருவதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் நடத்தும் அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு கட்டுரை போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

No comments:

Post a Comment