Thursday, 14 July 2016

ஆரஞ்சு பழத்தின் தோலிலிருந்து  கெமிக்கல் இல்லாத கொசுவத்தி சுருள் தயாரிப்புக்கான ஆராய்ச்சி 

தினசரி நமது வாழ்க்கையில் 35 வகையான பொருள்கள் பயன்படுத்துகிறோம்

சிங்கப்பூர் விஞ்ஞானி தகவல் 

பள்ளி மாணவர்களுடன் விஞ்ஞானி கலந்துரையாடல் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் விஞ்ஞானியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



                                                                    நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மாணவர்களிடம் சிங்கப்பூரில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானி சுவாமிநாதன் பேசுகையில் ,  சூரிய ஆற்றலில் ஆராய்ச்சி செய்து பொருள் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.  பள்ளியில் படிக்கும்போதே மின்விசிறி சுற்றுவது எவ்வாறு என ஆராய்ச்சி செய்து பார்த்துள்ளேன்.அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளை சிறு வயது முதலே செய்து வந்துள்ளேன்.உலகம் முழுவதும் பல ஆயிரம் டன் கழிவு பொருள்கள் மீண்டும் பயன்படுத்த முடியாமல் வீணாகிறது.இதில் பழங்கள் கழிவு அதிகமாகும்.பழங்களில் குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் தோள்களில் விட்டமின் எ  அதிக அளவு உள்ளது.அதனுடன் வேறு கழிவு பொருள்களும் உள்ளன.முந்தைய காலங்களில் நம் வீடுகளில் பழத்தை சாப்பிட்டு விட்டு அதனை தோலை வெயிலில்  காயவைத்து அதனை பொடியாக அரைத்து பல்வேறு வகையில் வீடுகளில் பயன்படுத்துவார்கள். வெயிலில் காயவைக்கும்போது தோலில்  நச்சு பொருள்கள் அழிந்து நல்ல பொருள்கள் மட்டும் இருக்கும்.அதனை அரைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்துவார்கள். வீணாக போகும் பல ஆயிரம் டன் பழ  தோலில் இருந்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து அதன் மூலம்  கெமிக்கல் இல்லாத கொசுவத்தி சுருள் உட்பட பல பொருள்கள் தயாரிப்பதற்கு ஆராய்ட்சிகள் நடைபெற்றுவருகிறது.அதாவது 100 சதவிகிதம் கழிவு பொருளில் இருந்து 100 சதவிகிதம் பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம்.நாம் பிறந்த இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் நன்மை செய்ய வேண்டும் என்பது எனது இலக்கு ஆகும்.தினசரி நமது வாழ்வில் 35 வகையான பொருள்களை நாம் பயன்படுத்திகிறோம்.யாரோ ஒருவர் தயாரித்த பொருள்களை நாம் பயன்படுத்தி சுகம் காண்பது போல் நாமும் எதையாவது கண்டுபிடித்து இந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசையாகும் என்று பேசினார்.அவரிடம் மாணவ,மாணவிகள் கார்த்திகா ,ராஜி,ஜெனிபர்,ஹரிஹரன்,ஜெகதீஸ்வரன்,பரமேஸ்வரி,தனலெட்சுமி,பரத் உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் விஞ்ஞானி சுவாமிநாதன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

                                          


No comments:

Post a Comment