Thursday 21 July 2016

 ஐக்கிய நாடுகள் சபை நடத்திய போட்டியில் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாநில அளவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை வென்றார்.பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.


                                                     
                                              ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சென்னை அக்னி கல்வி நிறுவனம் இணைந்து மாநில அளவில் நடத்திய முதல் ஆற்றல் சேமிப்பு  போட்டியில் பங்கேற்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி காவியா மாநில அளவில் இரண்டாம் பரிசினை பரிசினை வென்றார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவிற்கான தேசிய தகவல் அலுவலர் ராஜீவ் சந்த்ரன் மற்றும் அக்னி கல்வி நிறுவனங்களின் செயல்  இயக்குனர் அக்னீஸ்வர் மாணவி காவியாவுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்,பதக்கம்,கோப்பை ஆகியவற்றை வழங்கினார்கள்.மேலும் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவியின் தாயார் கூலி வேலை செய்து வருவதால் சென்னை அழைத்து செல்ல இயலாத நிலையில் பள்ளி ஆசிரியை முத்து மீனாள் போட்டிக்கு  மாணவியை சென்னை அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி சென்னை செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய ,ஆசிரியைகள் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினார்கள்.

பட விளக்கம் : ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவிற்கான தேசிய தகவல் அலுவலர் ராஜீவ் சந்த்ரன் மற்றும் அக்னி கல்வி நிறுவனங்களின் செயல்  இயக்குனர் அக்னீஸ்வர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி காவியாவுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்,பதக்கம்,கோப்பை ஆகியவற்றை வழங்கினார்கள்.



No comments:

Post a Comment