Tuesday, 26 July 2016

                                   அப்துல் கலாம் நினைவு ஓவிய போட்டி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.



                                      விழாவிற்கு வந்தவர்களை மாணவர் புகழேந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அப்துல் கலாம்  நினைவு ஓவிய போட்டி நடத்தப்பட்டு மாணவ,மாணவியர் முத்தையன்,ஜெயஸ்ரீ,பாலமுருகன்,கிஷோர்குமார்,அஜய் பிரகாஷ்,காயத்ரி,ஹரிஹரன்,பரமேஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றாம் வகுப்பு மாணவி காளியம்மாள் அப்துல் கலாம் வடிவம் செய்து கொண்டுவந்தார்.7ம் வகுப்பு நந்த குமார் , 8ம் வகுப்பு விஜய் ஆகியோர் விமானம் மாதிரி செய்து கொண்டு  வந்தனர். ஆசிரியர் ஸ்ரீதர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.மாணவி நித்ய கல்யாணி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு ஓவிய போட்டி நடைபெற்றது.


                                      

No comments:

Post a Comment