சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர் கட்டுரை போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்கு பாராட்டு
தியாகிகள் தினவிழா மற்றும் கே.எம்.எஸ்.கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன் மற்றும் மாணவி தனம் ஆகியோர் சிறப்பு பரிசுகள் பெற்றனர். பரிசுகளை பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன் மற்றும் குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு வழங்கினார்கள்.விடுமுறை நாளன்று மாணவர்களை போட்டிக்கு அழைத்து சென்றதுடன் பயிற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

No comments:
Post a Comment