குடியரசு தின விழா
அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உள்ள நாடு இந்தியா
பேராசிரியர் பேச்சு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை வாசுகி வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் பேரா.பழனி ராகுலதாசன் கொடிஏற்றிவைத்துப் பேசினார். இந்தியாவில் அனைவருக்கும் கேட்கும் உரிமை,பேச்சு உரிமை,எழுதும் உரிமை,சிந்திக்கும் உரிமை என அனைத்து உரிமைகளும் உள்ள குடியரசு நாடாக விளங்குகிறது. தென் ஆப்ரிக்காவின் மார்டின் லூதர் கிங் என்ற அறிஞர் எந்த நாட்டுக்கு நான் சென்றாலும் அது ஒரு சுற்று பயணம் மட்டுமே.ஆனால் இந்தியாவுக்கு வந்தால் அது சுற்று பயணம் கிடையாது.அது ஒரு புனித பயணம்.ஏன் என்றால் இந்தியா மகாத்மா காந்தி பிறந்த நாடு என்பார்.இந்தியாவில் சுதந்திரக்கு பிறகு குடியாட்சி ஆகா வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் தான் குடியரசு சட்டம் கொண்டு வரப்பட்டு குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது என்று பேசினார்.விழாவில் மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும்,ஒற்றுமை உணர்வு என்ற தலைப்பில் இரண்டாம் வகுப்பு மாணவர் வெங்கட்ராமன்,அனுசியா ,தேவதர்ஷினி,தேசிய ஒருமைப்பாடு என்கிற தலைப்பில் காயத்ரி,தனம் ஆகியோரும் பேசினார்கள்.
விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார் .ஆசிரியை சாந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் பேரா.பழனி ராகுலதாசன் மாணவ, மாணவியர்க்கு பரிசு வழங்குகிறார்.உடன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

No comments:
Post a Comment