Thursday, 21 January 2016

மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி

தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தேவகோட்டை :
திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.


திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தது. இப் போட்டிகளில் பங்கேற்று தேர்வு எழுதியதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளில் பரிசுகள் வழங்குகின்றனர் இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 5மணிக்கெல்லாம் தேவகோட்டையில் கிளம்பி மாணவர்களை பேருந்து மூலம் திருச்சிக்கு ஆசிரியர்  அழைத்து சென்றார். இது அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இப் பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணிதத்திறன் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரை தயார் படுத்தினார். கண்ணதாசன்,ஆகஷ்குமார்,ஜீவா,யோகேஸ்வரன்,தனலெட்சுமி,பார்கவி லலிதா,தனம்,கார்த்திகா ஆகிய மானவ்,மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் அவர்களது பெற்றோர்களுடன் திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று தேர்வில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தனர். மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் தேர்வு எழுதியதாக தெரிவித்தனர்.


 பட விளக்கம் : தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கணித் திறன் போட்டியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு


No comments:

Post a Comment