Thursday, 28 January 2016

எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான பொது  மருத்துவ  முகாம் 

 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான மாதந்திர  பொது  மருத்துவ  முகாம்  நடை பெற்றது.


                                     முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.  எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார்.எல்.ஐ.சி.யின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள்,விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள்,தைராய்டு தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது,நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல் நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான பொது  மருத்துவ  முகாம் நடை பெற்றது.மருத்துவர் ழுமலை மாணவர்களை பரிசோதனை செய்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் மோகன சுந்தரம்,வளர்ச்சி அதிகாரி தமிழரசு ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment