தேசிய வாக்காளர் தின விழா
தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சப் கலெக்டர் கலந்துரையாடல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி
பெறும் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின
விழாகொண்டாட்டத்தில் 100 சதவிகிதம் வாக்களிக்க ஆவண செய்வதே
தேசிய வாக்காளர் தினத்தின் நோக்கம் என தேவகோட்டை சப் கலெக்டர் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா
கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ
.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் தலைமை
தாங்கினார். தேவகோட்டை நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் , வருவாய் ஆய்வாளர்
ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சப் கலெக்டர் மாணவ,மாணவிகளின்
கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில்,அனைவரும் வாக்களிக்க ஆவண செய்வதே
அரசின் நோக்கமாகும்.100 சதவிகிதம் வாக்களிக்க அனைவரும் முயற்சி எடுக்க
வேண்டும்.அதற்காகத்தான் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம்
கடைபிடிக்கபடுகிறது.எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி நான்
உங்களை போன்று 4ம் வகுப்பு படிக்கையில் எனக்கு போட்டியில் வெற்றி
பெற்றதற்காக உதவி கலெக்டர் கையால் பரிசு வாங்கினேன்.அது எனது பள்ளி
வாழ்கையில் மறக்க இயலாத சம்பவம்.IAS ஆவதற்கு இளம் வயதில் குறிக்கோள் வைத்து
கொள்ள வேண்டும்.நான் IAS ஆவதற்கு எனது தம்பியும்,எனது அம்மாவும் மிகுந்த
உதவி செய்தனர்.பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியை
போட்டிகளில் வெற்றி பெற்ற உடன் பாராட்டு தெரிவிப்பார். அவர் எனக்கு
மிகவும் பிடித்த ஆசிரியர்.இந்த பணியின் மூலம் மக்களுக்கு பணி செய்வதே எனது
லட்சியம் ஆகும் , இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மூத்த குடிமகன்
லெட்சுமணன் என்பவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
பட விளக்கம்;IMG:0284
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில் தேசிய வாக்காளர்
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரங்கோலி போட்டியில் பரிசுக்குரியவர்களை
தேவகோட்டை சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் , நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் ஆகியோர் ரங்கோலி கோலங்களை பார்வையிட்டனர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம்;IMG:0299
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில் தேசிய வாக்காளர்
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் மூத்த குடிமகன் லெட்சுமணன் என்பார்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.உடன் நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,நகராட்சி தேர்தல் பிரிவு எழுத்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment