சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சாக்லெட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சாக்லெட்டுகளைத் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பாக வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் மாணவர்களின் பிறந்தநாளின்போதும் சாக்லெட்டுக்கு மாற்றாக கடலை அச்சு மிட்டாய் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற எட்வின், யாழினி, ரித்திகா, தேவிகா, தட்சணா, கார்த்திகாதேவி, நவீன், விஜயகண்ணன், ஆகாஷ்குமார், சரண் உள்ளிட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், சபரி, ஸ்டெபி, என்ஜாய், நந்தனா உள்ளிட்ட மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிதை, பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்றனர். மாணவி ஹாசினி முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பாரதியார் உட்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் மாணவர்கள் மாறுவேடமிட்டு வந்து அசத்தினார்கள்.
ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்றார். ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகளையும் கடலை மிட்டாயையும் வழங்கினார்.
வீடியோ: https://www.youtube.com/watch?v=p7LI0WSBi3Y
No comments:
Post a Comment