Monday, 10 August 2026

போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி

சப்-இன்ஸ்பெக்டர்கள் விழிப்புணர்வு அறிவுரை






தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவகோட்டை நகர் காவல் நிலைய சார்பு காவல் ஆய்வாளர்கள் அகிலன் மார்டின் மற்றும் அஸ்லாம் ஷேர்கான் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி ரித்திகா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார்பு காவல் ஆய்வாளர்கள் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சார்பு காவல் ஆய்வாளர் அகிலன் மார்டின் பேசுகையில், போதைப் பொருட்கள் மனிதனின் உடல் மற்றும் மனநலத்தைப் பாதிப்பதுடன், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும். போதைப் பழக்கம் பல்வேறு தீய செயல்களுக்கு காரணமாக அமையக்கூடும். எதிர்கால இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

மேலும், போதைப் பொருட்களை யாரேனும் பயன்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம் போதையில் இருக்கும்போது நேரடியாகச் சென்று அறிவுரை கூறாமல், அவர்கள் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் அதன் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. செல்போன்களை பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் அறிவுரை வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், காவல் சார்பு ஆய்வாளர்கள் அகிலன் மார்டின், அஸ்லாம் ஷேர்கான் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் உள்ளார். போதை பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்பாக பேசிய  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


வீடியோ : https://www.youtube.com/watch?v=ZTf9d8b29-E


https://www.youtube.com/watch?v=IlVNXd_lZ3E

No comments:

Post a Comment