Sunday, 8 October 2023

 அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல் 

தொடக்க நிலை வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு 

 இரண்டாம் பருவ விலையில்லா புத்தகங்கள் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்குதல்  

 



 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.
                                  சமீபத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் பருவ விடுமுறையின் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு அரும்பு ,மொட்டு,மலர் பயிற்சி கையேடுகள் இன்று பள்ளிகளில் வழங்கப்பட்டது.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில், 
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கருப்பையா மற்றும்  அன்னப்பூரணி ஆகியோர்  எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு   வழங்கினார்.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்  வகுப்பு வரை புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இரண்டாம் பருவத்திற்கான நோட்டுக்களும் , புத்தகங்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில், 
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கருப்பையா மற்றும்  அன்னப்பூரணி ஆகியோர்  எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு   வழங்கினார்கள் .

No comments:

Post a Comment