காவல் துறை சார்பாக கட்டுரை, ஓவிய போட்டிகள்
அழகாக ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. சாலை விபத்து மற்றும் இறப்புக்களை குறைத்தல் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் , காவலர் பொதுமக்கள் - ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.தேவகோட்டை நகர காவல்துறை துணை ஆய்வாளர் அன்சாரி, போக்குவரத்துக்கு காவல் ஆய்வாளர்கள் அகிலன்,கலா உட்பட காவலர்கள் இப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல்துறை சார்பான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர காவல்துறை துணை ஆய்வாளர் அன்சாரி, போக்குவரத்துக்கு காவல் ஆய்வாளர்கள் அகிலன்,கலா உட்பட காவலர்கள் இப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment