Tuesday 10 October 2023

 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை 

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

 






 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையினரால் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

                                       ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ரவி மணி மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களுடன் அனைத்து தகவல்களையும் செய்து காண்பித்து விளக்கி பேசுகையில், குளங்களில் மாணவர்கள் குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

                       மழைக்காலங்களில் சாலைகளில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும். ஏனென்றால் மழைகாலங்களில் பாம்புகள் ஆங்காங்கே தெரியும் வாய்ப்பு உண்டு. அதனால் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்

                           சாலைகளில் நடந்து செல்லும் போதும் , வாகனத்தில் செல்லும்போதும் கவனமுடன் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் 112 மற்றும் 101 என்ற இலவச எண்களில் உடனடியாக  அழைக்கலாம்.

                              பாம்பு கடித்தால் அந்தப் பகுதியை கட்ட வேண்டாம். அவ்வாறு கட்டினால் அதற்கு கீழே உள்ள பகுதிகளில் உள்ள செல்கள் உயிர் இழந்து வந்துவிடுகின்றன. எனவே ஏதேனும் கடித்து விட்டால் வெற்றிலை மற்றும் மிளகை உடனடியாக சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.

                             மழை காலங்களில் மின்சார ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கலாம். அவ்வாறு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை தொடக்கூடாது. என்று பேசினார்.   தீயணைப்பு குழுவினரால் ,  தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றுவது எப்படி என்கிற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார் .

 

 படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தகவல்கள் மாணவர்களுக்கு செயல் விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.. தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் எம் ஜி .ரவி மணி மற்றும் குழுவினர் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்கள் .

 

 வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=ceWhsC8V5I4

 https://www.youtube.com/watch?v=me90EfOd72M

 

 

No comments:

Post a Comment