17ல் வாகனம் ஓட்டினால் 25 வரை ஓட்ட முடியாது
25,000 ரூபாய் அபராதம், மூன்றாண்டு சிறை தண்டனையும் உண்டு
டிஎஸ்பி தகவல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு தேவகோட்டை டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் ,தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்கள் அகிலன், கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை காவல் துறை டிஎஸ்பி பார்த்திபன் தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது, பள்ளி , கல்லூரி மாணவர்கள் வாகனங்களை 18 வயதுக்கு கீழ் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டும் நிலையில் அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3 ஆண்டு சிறை தண்டனையும் உண்டு. 25 வயது வரை வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்படும்.
உங்கள் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் ஹெல்மெட் அணிய செய்யுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று உங்கள் வீட்டில் உள்ளவர்களை அன்போடு கேட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் விபத்து இல்லாத சாலை பயணம் ஆகும்.என்று பேசினார்.
மாணவர்களின் பல்வேறு சாலை விதிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு போக்குவரத்து ஏட்டு யோவா பதில்கள் அளித்தார். நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம், தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்கள் அகிலன், கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் பல்வேறு விதமான சாலை போக்குவரத்து தொடர்பான சந்தேகங்களுக்கும் காவலர்கள் விளக்கம் அளித்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=Xvu22m5DNmI
https://www.youtube.com/watch?v=NWDJQv8JCI4
https://www.youtube.com/watch?v=yB0d15Rcwxo
No comments:
Post a Comment