Tuesday, 17 October 2023

 உணவில்  கலப்படம் கண்டறிதல் எப்படி?

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 






 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
                                              ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை   மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரும் , மருத்துவருமான  பிரபாவதி  உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை   மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.உணவு கலப்படம் தொடர்பாக புகார்களை 9444042322 என்கிற எண்ணிற்கு கட்செவி மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார்.கலப்படம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

 
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரும் , மருத்துவருமான  பிரபாவதி  உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை  மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=qEz_WtogeuE

https://www.youtube.com/watch?v=aHOCzPZnxtQ




No comments:

Post a Comment