Wednesday, 11 October 2023

 தேசிய அஞ்சல் வாரம் 

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் 

பள்ளி மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம்

 

 










தேவகோட்டை – தேசிய அஞ்சல் வாரத்தை  முன்னிட்டு  தேவகோட்டை தலைமை  அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ்  மாணவர்களை வரவேற்றார். அஞ்சலக  துறையின் செயல்பாடுகள் ,பயன்கள் குறித்து  அஞ்சலக தலைமை அதிகாரி செல்வராஜ்,  மற்றும் சி.பி.சி மேலாளர் சரவணன் ,  அஞ்சலக அதிகாரி சஷாங் சவுத்திரி, அஞ்சலக அலுவலர்கள் அனைவரும்  மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை  அஞ்சலகத்துக்கு களப்பயணம் சென்ற   தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ்   அஞ்சலக அலுவலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

வீடியோ : https://www.youtube.com/watch?v=idc8aDw9iZk

No comments:

Post a Comment