ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா
பிச்சை எடுத்தாவது படி, ஆனால் படித்து பதவி வந்தவுடன்
"பிச்சை எடுக்காதே"
லஞ்சம் வாங்குபவர்களையும், லஞ்சம் வாங்கவதர்களையும் எப்படி கண்டுபிடிப்பீர்கள் ?
மாணவரின் அசத்தலான கேள்விக்கு பதில் அளித்த விஜிலென்ஸ் டி.எஸ்.பி.
லஞ்சம் வாங்கி பிடிபட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை
விஜிலென்ஸ் டி .எஸ்.பி. விழிப்புணர்வு தகவல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது.ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான் பிரிட்டோ லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசுகையில் , பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆசை படக்கூடாது.எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம்,வாங்குவதும் குற்றம், நேர்மையை நிலைநாட்டுங்கள்.ஆசை அதிகமாவதே லஞ்சத்துக்கு காரணமாகும்.நமது பயம் ஒழிந்தால் லஞ்சம் ஒழியும் . லஞ்சம் வாங்குவபவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும் . என்று பேசினார்.
சிவகங்கை விஜிலென்ஸ் டி.எஸ்.பி. , மாணவர்களுக்கு புரியும் வகையில் எளியமையான முறையில் லஞ்சம் என்றால் என்ன? ஊழல் என்றால் என்ன? அது எங்கெல்லாம் அதிகமாக உள்ளது போன்ற தகவல்களை விளக்கினார்.மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.புதிய சட்டத்தின்படி லஞ்சம் வாங்கி பிடிபட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. லஞ்சம் ,ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.மொபைல் எண் : 9498190140 மற்றும் 04575-240222. நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்வில் விஜிலென்ஸ் பிரிவின் முதுநிலை காவலர்கள் தனபாலன் ,கண்ணன் ஆகியோர் விழுப்புணர்வு உறுதிமொழி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறப்பாக கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கும் , நிகழ்வில் லஞ்ச விழிப்புணர்வு தொடர்பாக கூறிய தகவல்களை உள்வாங்கி பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி. ஜான் பிரிட்டோ பதில் அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=yWJbb_B9XM4
https://www.youtube.com/watch?v=9fKQz5xfgaM
No comments:
Post a Comment