போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் மாணவர்கள்
போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி , விழிப்புணர்வு வாசகங்களை உரக்க சொல்லி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
போதை பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக, அனைத்து பள்ளி,
கல்லுாரிகளிலும் இன்று உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் போதை பழக்கத்தில் சிக்காமல்
இருக்கவும், சிக்கியவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்கவும், அரசு
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சிவகங்கை
மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன் , அகிலன், ரெக்ஸ் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதை
பழக்கத்திற்கு
எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.போதை குறித்த விழிப்புணர்வினை
மாணவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் அன்சாரி விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்..ஆசிரியர் ஸ்ரீதர் இதற்கான ஏற்பாடுகளை
செய்து இருந்தார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி , விழிப்புணர்வு வாசகங்களை உரக்க சொல்லி ஊர்வலம் சென்று போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன் , அகிலன், ரெக்ஸ் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்..
வீடியோ :
https://www.youtube.com/watch?v=vz2LBBCWfug
https://www.youtube.com/watch?v=e9NdaW3ecbM
https://www.maalaimalar.com/news/district/ramanathapuram-news-taking-the-drug-prevention-pledge-499260
https://www.maalaimalar.com/news/district/ramanathapuram-news-taking-the-drug-prevention-pledge-499260
https://www.dailythanthi.com/News/State/program-to-accept-the-language-of-awareness-of-drug-eradication-768059

No comments:
Post a Comment