பள்ளியில் இனிப்பு பொங்கல்
மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய சமூக பாதுகாப்பு தினதன்று அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டது. அதை செயல்படுத்தும் வகையில் அனைத்து சத்துணவு மையங்களிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.இதன்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுவையான இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.அனைத்து மாணவர்களும் இனிப்பு பொங்கலை ருசித்து சாப்பிட்டனர்.பெற்றோர் குழுவினரும் சத்துணவை சாப்பிட்டு பாராட்டினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியை முத்துலெட்சுமி , சத்துணவு அமைப்பாளர் இந்திரா, சமையலர் தமிழரசி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.இனிப்பு பொங்கல் சாப்பிட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி கூறினார்கள்.
பட விளக்கம் : கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய சமூக பாதுகாப்பு தினதன்று தமிழக அரசு ஆணையின் படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=56QoXZrdZG8
No comments:
Post a Comment