சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்
சுதந்திர தின விழா
தேவகோட்டை – ஆக- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு
பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி
ஏற்றி பேசினார்.மாணவர்களுக்கும்
,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல
ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு
மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். சுதந்திர வேட்கையை போற்றும் விதத்தில் சொல்லடி சிவசக்தி நாடகம் மாணவர்களால் நடத்தப்பட்டது. முன்னதாக மாணவ,மாணவிகளின்
கலை நிகழ்ச்சிகளும்,சுதந்திர தின விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.முதல் வகுப்பு மாணவி தக்ஷணா அரிசியில் கொடி செய்து கொண்டு வந்து அனைவைரையும் அசத்தினார்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி ஏற்றி
மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார்.
வீடியோ :
நாடகம் : https://www.youtube.com/watch?v=RYtUZKUATPo
கவிதை : https://www.youtube.com/watch?v=pL4Q3--eX28
No comments:
Post a Comment