சந்திரியான் - 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் - 3 விக்ரம்
லேண்டர் நிலவை தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சந்திரயான் -3. நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள
முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த
ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம்
பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில்
இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக
நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து
கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர்
வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது இன்று நிலவில் தரை இறங்கி விக்ரம்
லேண்டர் நிலவை தொட்டது . என்கிற
தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து
கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து
விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி
மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள்
ஆகியோர் செய்து இருந்தனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் - 3 விக்ரம்
லேண்டர் நிலவை தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment