நேர்மை மாணவருக்கு பாராட்டு
இளம் வயது மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சமீபத்தில் இப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியின் காலில் அணிந்து இருந்த வெள்ளி கால் கொலுசு பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ரோட்டில் தவறி விழுந்து விட்டது .இது குறித்து பெற்றோர் தகவல் தெரிவித்ததும், பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பேசும்போது , பள்ளி மாணவர்கள் தாங்கள் நடந்து செல்லும் சாலையில் வெள்ளி கால் கொலுசு கிடந்தால் தகவல் தெரிவிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
இப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் சபரிவர்ஷன். மறுநாள் பள்ளிக்கு வந்த இம் மாணவர் , காலையில் வந்த உடன் பள்ளிக்கு வெளியே சற்று தூரத்தில் ரோட்டில் , மண்ணில் வெள்ளி கால் கொலுசு போன்று புதைந்து கிடப்பதாகவும், மேலே சற்று லேசாக நீட்டி கொண்டு இருப்பதாகவும் வகுப்பு ஆசிரியரிடம் கூறினார். வகுப்பு ஆசிரியரும் ,மாணவரும் சென்று பார்த்தபோது தொலைந்து போன வெள்ளி கால் கொலுசு மண்ணின் உள்ளே இருப்பதை கண்டு பிடித்து எடுத்தனர்.
உடனடியாக வெள்ளி கொலுசை தவறவிட்ட மாணவியின் வீட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டு , அவர்களும் ஏற்கனவே இருந்து ஒரு கொலுசை கொண்டு வந்து காண்பித்து, இந்த கொலுசும் அதன் ஜோடிதான் என்று உறுதிப்படுத்திபெற்று கொண்டனர். தனது மகளுக்கு முதன்முதலாக வாங்கிய வெள்ளி கொலுசு திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் மாணவியின் தந்தை விடைபெற்றார்.
பள்ளிக்கு வெளியே , ரோட்டில் பல பொதுமக்களும் , மாணவர்களும் செல்லும் இடத்தில் ,கவனமாக பள்ளியில் சொன்னதை கேட்டு இளம் வயது மாணவர் சபரிவர்ஷன் நல்ல எண்ணத்துடன்,நேர்மையுடன் வெள்ளி கொலுசை எடுத்து கொடுத்த நிகழ்வை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.நிகழ்வில் மாணவரின் தாயார் அமலாவிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவரின் தாய் தனது மகளின் செயலை பார்த்து
தன்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் விட்டார்.ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்
அனைவரும் மாணவருக்கு பாராட்டு தெரிவித்து,வாழ்த்தினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 3ம் வகுப்பு படிக்கும் இளம் வயது மாணவர் சபரிவர்ஷன்
பள்ளிக்கு வெளியே ரோட்டில் கீழே கிடந்த வெள்ளி கால் கொலுசை நேர்மையுடன் வகுப்பு ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த செயலை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.உடன் மாணவரின் தாய் அமலா மற்றும் ஆசிரியை முத்துலெட்சுமி ஆகியோர் உள்ளார்கள் .
வீடியோ ; https://www.youtube.com/watch?v=xpDGqpdUb_w
No comments:
Post a Comment