Saturday, 25 April 2020

ஆன்லைன் மூலம் கொரோனா  விழிப்புணர்வு ஓவியப்போட்டி 








தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினார்கள். 
                           
                             ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில்  சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,முத்துமீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் முயற்சி  எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் நடத்தினார்கள்.பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது.வாட்சப் உள்ள மாணவர்கள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்களில்  சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள் முதல் வகுப்பு சபரீஸ்வரன், இரண்டாம் வகுப்பு ஹரிப்பிரியா, மூன்றாம் வகுப்பு ப்ரஜித் ,  நான்காம் வகுப்பு முத்தையன், ஐந்தாம் வகுப்பு திவ்யஸ்ரீ ஆகியோர் ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டியில்  பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

                                கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பள்ளி மாணவர்களை மொபைல் வழியாக பேச செய்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிற்கு புத்தகங்கள் கொடுத்துவிட்டு, புத்தகம் படித்து வருபவர்களுக்கு பரிசு என்றும்  அறிவித்து, ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நலன் குறித்தும்,  புத்தகங்கள் படிப்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்கள்.மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அவர்களுடைய மனநிலைகள் மாறாமல் இருப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் எடுத்து வருவதாக தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.இதற்கு மாணவர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மொபைல் வழியாக நடைபெற்ற ஆன்லைன் கொரனோ விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் மாணவர்கள் வரைந்து அசத்திய ஓவியங்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  முத்துலெட்சுமி, செல்வமீனாள் , முத்துமீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.


No comments:

Post a Comment