ஆளுமைகளுடனான அனுபவம்
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் பழகிய அனுபவம்
இன்று சேர்மன் மாணிக்கம் நடுநிலைப் பள்ளி தேவகோட்டைக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிதில் மிக்க மகிழ்ச்சி. தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது .நான் பலமுறை செய்திகளில் பார்த்து நேரில் பள்ளி வளாகத்தில் இன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சிறப்பாக நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை உணர்கின்றேன்.
பள்ளி மேலும் மேலும் சிறப்பாய் வளர எனது வாழ்த்துக்கள்.
மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ விஞ்ஞானி
விட முயற்சி வெற்றி தரும்
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து நண்பர்களின் வழியாக தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்தி வந்தேன் . அதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை தான் திருச்சி வரை வர இருப்பதாகவும், அப்பொழுது எங்கள் பள்ளிக்கு வர இருப்பதாகவும் , எத்தனை கிலோமீட்டர் இருக்கும் என்றெல்லாம் அண்ணார் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் .பிறகு சில காலங்கள் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை . மீண்டும் நண்பர்கள் மூலமாக விடாமுயற்சி செய்து திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களை மீண்டும் மீண்டும் முயற்சி ஏற்படுத்திக் கொண்டே இருந்தோம் . அதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் நண்பர்கள் வழியாக எனக்கு இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தர இருப்பதாக தகவல் தெரிவித்தார்கள். அந்த நாள் ஏதுவாக இருக்குமா என்றும் கேட்டுக் கொண்டார்கள். அந்த நாள் ஏதுவாக இருக்கும் என்கிற தகவலையும் நான் தெரிவித்தேன் . அதன் தொடர்ச்சியாக அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி வருகை தந்தார்கள் .
மாணவர்ளுடன் இயல்பாக பழகுதல்
மாணவர்களுடன் கலந்துரையாட வரும்பொழுது மதியம் இரண்டே முக்கால் மணிக்கு வருகிறேன் என்று கூறியவர் , அரை மணி நேரம் முன்னதாகவே இரண்டே கால் மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அவருடன் அவரது துணைவியார் அவர்களும் வந்திருந்தார்கள். இருவரும் மிகவும் அன்பாக மாணவர்களிடமும் , ஆசிரியர்களிடமும் இயல்பாக பேசி பழகினார்கள். அனைத்து தகவல்களையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டார்கள் .முன்பே எங்கள் பள்ளி தொடர்பாக நிறைய தகவல்கள் தெரிந்து வைத்திருந்ததால் எங்கள் பள்ளி மாணவர்களிடம் இயல்பாக பேசினார்கள் . மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மிகத் தெளிவாக பதிலைக் கூறினார்கள். மிகுந்த அளவில் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களும் ,பெற்றோர்களும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும்,தொலைக்காட்சி நிருபர்களும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த உடன் அனைவருடனும் அன்பாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள்.எங்கள் பள்ளியில் சுமார் மூன்றரை மணி நேரம் அன்னார் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி மிகவும் அன்பாக இனிமையாக பேசி சென்றார்கள்.
குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெறுதல்
அதன்பிறகு நாங்கள் எங்கள் பள்ளியில் இருந்து கிளம்பி அருகில் உள்ள வள்ளி ஆச்சி வீடு என்ற தேவகோட்டையில் ஒரு மிகப்பெரிய வீட்டிற்கு அன்னார் அவர்களை அழைத்துச் சென்றோம். அங்கு அவர்கள் பல்வேறு விதங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளர் உடன் மிக அன்பாக, ஆதரவாக பேசினார்கள் . மிகப்பெரிய வீட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் மிகுந்த அன்போடு பிள்ளையார்பட்டி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார்கள். மறுநாள் காலையில் காரைக்குடி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இடத்தில் சென்று அவர்களையும் அவர் துணைவியார் அவர்களையும் எனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்று வந்தோம்.
மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பேச்சு
இஸ்ரோவில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற தமிழர் என்கிற முறையில் அவரது வரவு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த அளவில் மகிழ்ச்சியை கொடுத்தது. அரசுப் பள்ளியில் படித்து மிகப்பெரிய பதவியில் வெற்றி பெற்றுள்ள ஆளுமை மாணவர்களின் முன்பு வந்து பேசும்பொழுது மாணவர்களிடம் மிகப்பெரிய உத்வேகம் ஏற்பட்டது என்பதே உண்மை . மாணவர்களும் அவர் போல் ஆக வேண்டும் என்றும்,இஸ்ரோவில் பல்வேறு பணிகள் இருக்கிறது என்கிற விவரத்தையும் தெரிந்து கொண்டார்கள். தொடர்ந்து அவரிடம் நண்பர்களின் வாயிலாக தொடர்பில் இருக்கின்றோம்.அன்னாருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி கலந்த அன்புடன்
லெ . சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்துரையாடல் நடத்திய வீடியோக்கள்
https://www.youtube.com/watch?v=2t327VGUkeY&t=29s
https://www.youtube.com/watch?v=RuV2vgsZlms
https://www.youtube.com/watch?v=lh00qSX1ZtE
https://www.youtube.com/watch?v=A4YCfPC29Tk
https://www.youtube.com/watch?v=qkCfkcU-MyM&t=6s
https://www.youtube.com/watch?v=0DQ52_38F-Y
https://www.youtube.com/watch?v=IjdRLZJksSI
https://www.youtube.com/watch?v=vd3aE1yb9nQ
இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அறிவியல்,விண்வெளி தொடர்பான பேச்சுக்களை தொடர்ச்சியாக வரும் லிங்கில் சென்று காணலாம்
https://kalviyeselvam.blogspot.com/2018/09/blog-post_22.html#more
https://kalviyeselvam.blogspot.com/2018/09/blog-post_21.html#more

No comments:
Post a Comment