Tuesday, 28 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

    மதுரை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையாளர் பாண்டிராஜா  IRS   அவர்களுடன் பழகிய அனுபவம்





                          பாண்டிராஜா IRS  அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றி பாராட்டி எழுதிய வரிகள்:

                             சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு இன்று வருகை தந்து உரையாற்றினேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .மாணவர்கள் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் தங்களது கேள்விகளை கேட்டு என்னிடமிருந்து பதில் வாங்கினார்கள் . 

                          பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக இந்தப் பள்ளியானது எதிர்காலத்தில் பல சாதனையாளர்களை உருவாக்கும் என்பதில் எனக்கு 100% நம்பிக்கை உள்ளது.

             இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும், மன வலிமையுடனும், உடல் நலத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

 வெ . பாண்டிராஜா,IRS,
இணை ஆணையாளர்,
 சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம்,
 மதுரை.

நிகில் அறக்கட்டளை மூலமாக ஏற்பட்ட அறிமுகம் :


             பாண்டி ராஜா,IRS   அவர்கள்  எனக்கு நிகில் அறக்கட்டளையின் நிறுவனர் திரு .சோம .நாகலிங்கம் ஐயா அவர்களின் மூலமாக அறிமுகமானார்கள்.ஜிஎஸ்டி தொடர்பாக காரைக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு சோம. நாகலிங்கம் IRS அவர்கள் கலந்து கொண்டார்கள். எனக்கும் அழைப்பு கொடுத்து இருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு சென்ற பொழுது பாண்டி ராஜா,IRS அவர்களை சந்தித்து அறிமுகமாகிக் கொண்டேன் . அப்போது அவர்களிடம் எங்கள் பள்ளி பற்றி கூறி அவருடைய என் வாங்கிக்கொண்டேன். பிறகு தொடர்ந்து இணையவழியில் அவருடன் தொடர்பில் இருந்தேன்.பிறகு   காரைக்குடி கே.வி. பள்ளிக்கு ஆளுமைத்திறன் பயிற்சி வழங்குவதற்காக நிகில் அறக்கட்டளை குழுவினர் வந்திருந்த பொழுது பாண்டிராஜா  ஐஆர்எஸ் அவர்கள் தலைமை தாங்கி அந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.கே.வி.பள்ளியில் நிகில் அறக்கட்டளை சார்பில்   திரு.சோம .நாகலிங்கம் IRS  ( நிறுவனர், நிகில் அறக்கட்டளை ) அவர்களை தலைமை பயிற்சியாளராக கொண்டு நடை பெற இருந்த இருந்த ஆளுமை திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஏற்பாடுகளை அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.சாய் தர்மராஜ் ( போட்டோ கிராபர்,ஜூனியர் விகடன் ) அவர்களும்,நானும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தோம்.அப்பொழுது மீண்டும் திரு.பண்டிராஜா IRS அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது .அந்த நிகழ்ச்சியின்போது பண்டி ராஜா IRS அவர்களை சந்தித்து எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு  அன்புடன் கேட்டுக் கொண்டேன். 

பள்ளிக்கு மாணவர்களுடன் கலந்துரையாட அழைத்தது ஏன் ?

                 காரணம் என்னவெனில்,  பண்டி ராஜா IRS அவர்கள் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து மிகப்பெரிய பதவியில் இன்று இருப்பதால் அவர்களுடைய  ஆளுமை பயிற்சி  மாணவர்களுக்கு கிடைத்தால் அவர்களும் மிக பெரிய பதவிகளுக்கு பிற்காலத்தில்   வருவார்கள் என்ற எண்ணத்தில்  அவர்களை அணுகினேன். அவர்களும் உடன் ஒப்புதல் அளித்து அடுத்த வாரமே எங்கள் பள்ளிக்கு சனிக்கிழமையில் ( அவருடைய விடுமுறையை அனுசரித்து ) மனைவியுடன் வருகை தந்து மிகச்சிறப்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

 கிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் IRS ஆன வெற்றியின் ரகசியம் என்ன ?

                                       ஜிஎஸ்டி தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்கள். கிராமத்தில் பிறந்து இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு நாம் எப்படி வெற்றி பெறுவது, IAS போன்ற பணிகளுக்கு படித்து எவ்வாறு வெற்றி பெறுவது என்கிற விவரங்களை எடுத்துக் கூறினார்கள். போட்டித் தேர்வுகளுக்கு நாம் எங்கெல்லாம் சென்று படிக்கலாம் என்கிற விவரங்களையும் மிக இயல்பாக எடுத்துரைத்தார்கள்.ஆங்கில வழி கல்வியில் படித்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பது மாயை என்பதை மாணவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அவர்களுடனான அன்றைய பொழுது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. காலை ஒன்பதரை மணி முதல் மதியம் 12.30  மணி வரை மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள் . அன்னாரது  துணைவியார் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார்கள்.அதன்  பிறகு பாண்டிராஜா IRS அவர்களுடனான தொடர்பு இன்றுவரை தொடர்ந்து   இருந்து வருகின்றது. சிறிய கிராமத்தில் பிறந்து மிகப்பெரிய வெற்றியடைந்த ஆளுமையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதும்,  பாண்டிராஜா IRS அவர்கள் மாணவர்களுடன்  கலந்துரையாடிய    நிகழ்வும்  மறக்க முடியாத ஒரு அனுபவம். அவருடைய வாழ்க்கை தொடர்பாகவும், வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் தொடர்பாகவும்,கிராமத்தில் இருந்து பல கிலோமீட்டர் நடந்தே சென்று  படித்த அனுபவம் குறித்தும்,  இன்னும் பல்வேறு தகவல்களை மிக இயல்பாக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அது மாணவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது .

      விமலாதேவி பாண்டிராஜ் IRS  அவர்கள் எங்கள் பள்ளி நிகழ்வு குறித்து பாராட்டி எழுதிய வரிகள்:

               சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு இன்று (03/02 /2018 ) வர நேர்ந்தது . திரு V. பாண்டி ராஜா , IRS, அவர்களின் உரையாடலை மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டு, கேள்விகள் கேட்டு, நிறைய அறிந்து கொண்டனர் என நம்புகிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் சிறிய வயதிலும் மிகவும் ஆர்வமாகவும்,  ஆசையாகவும் நிறைய கேள்விகள் கேட்டது மகிழ்ச்சியை அளித்தது ( without stage fear). அவர்களுக்கு இத்தகைய வாய்ப்புக்களை வழங்கி வரும் தலைமையாசிரியர் திரு . சொக்கலிங்கம் அவர்களின் இந்தப் பணி தொடர வேண்டும் , அது மூலமாக இங்கு படிக்கும் மாணவர்கள் பயன்பெற வேண்டும்.  அனைவரும் நல்ல எதிர்காலத்துடன்  திகழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். நன்றி. 

விமலாதேவி பாண்டிராஜ்,
மதுரை.

நன்றிகள் பல :

 
                   மதுரையில் இருந்து தேவகோட்டை வரை எங்கள் பள்ளிக்காகவே மட்டும் வந்து மாணவர்களுடன் மூன்று மணி நேரம் கலந்துரையாடி மாணவர்ளுக்கு ஆளுமை பயிற்சி அளித்த அன்னாரும்,அவரது துணைவியாரும் ஒத்துழைப்பு அளித்த  நிகழ்வு மறக்க முடியாத ஒரு அனுபவம். உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும், அன்னாரை அறிமுகப்படுத்திய   சோம . நாகலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


  நன்றி கலந்த அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
8056240653 

 பாண்டிராஜா IRS  அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வீடியோவாக :

 https://www.youtube.com/watch?v=Wgb2n2mB0ks&t=7s

 https://www.youtube.com/watch?v=7TxH2pMggqM

 https://www.youtube.com/watch?v=MD3qcBkSEhs

 https://www.youtube.com/watch?v=RSLFvuinRzQ

 பாண்டிராஜா IRS  அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வுவலைதள பதிவு : 


 https://kalviyeselvam.blogspot.com/2018/02/irs-ias-iasirs.html#more










  

1 comment: