ஆளுமைகளுடனான அனுபவம்
வருமான வரித்துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களுடன் பழகிய அனுபவம்
Students very much intractive and
knowledgeble , So it was great
Opportunity to inspire these children to
aspire for greater goals in their life.
All the Best
&
Make the Best
V.NANDAKUMAR , IRS,
JOINT COMMISSIONER OF
INCOME TAX,
Dept of Revenue ,
Govt of India
ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த ஆளுமை
நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களை கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரிக்கைகளின் வாயிலாக அறிந்து நண்பர் ஒருவரின் மூலமாக தொடர்பு கொண்டேன் . டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் தன்னையே வென்று சாதனை புரிந்து மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு மிகப் பெரிய முன்னுதாரணமாக ஜொலிக்கக்கூடிய ஆளுமையை நம் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அன்னார் அவர்களின் நண்பர் ஒருவருடன் தொடர்பு கொண்டேன் . நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களும் என்னிடம் நன்றாகப் பேசினார்கள். வாய்ப்பு வரும்போது எங்கள் பள்ளிக்கு வருவதாக கூறினார்கள் .மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களை தொடர்பு கொண்டு சரியாக இருபது நாட்களில் எனக்கு நண்பரின் மூலமாக எனக்கு அழைப்பு வந்தது. நாளை உங்கள் பள்ளிக்கு வரலாமா என்று கேட்டிருந்தார்கள். சென்னையில் இருந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி மதுரை வந்து மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் மிகப்பெரிய விழாவில் மாலை கலந்து கொள்ள இருப்பதாகவும், அதனுடன் தேவகோட்டைக்கு எங்கள் பள்ளிக்கு வர இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் காலை மதுரை விமானத்தின் மூலமாக வந்து சரியாக பத்தரை மணிக்கு எல்லாம் எங்கள் பள்ளிக்கு வந்து விட்டார்கள்.
டிஸ்லெக்ஸியாவை வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்
மூன்று மணி நேரம் வரை எங்கள் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். தான் எவ்வாறெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் என்பதை மிகத் தெளிவாக மாணவர்களுக்கு விளக்கினார் . பள்ளியிலிருந்து தான் சரியாக படிக்கவில்லை என்று வெளியில் வந்து விட்டதாகவும் , தனக்கு எழுதவதில் சிரமம் இருக்கிறது என்கிற விவரத்தை தெரியாமல் தான் பள்ளிக்கு போகவில்லை என்றும்,பள்ளியில் இருந்து சரியாக படிக்கவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டதாகவும் , அதை எல்லாம் தாண்டி தானாக படித்து அதை எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொண்டு அப்துல் கலாம் அவர்களின் கையால் பாராட்டு பெற்றதாகவும், இந்தியாவிலேயே மிகச் சிறந்தவராக ஐஆர்எஸ் பயிற்சியில் வெற்றி பெற்றதாகவும் மாணவர்களிடம் பேசினார்.. இதற்கு காரணம் தன்னுடைய விடாமுயற்சி என்றும், மற்றவர்கள் ஏளனம் செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெற்றிபெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தை மனதில் கொண்டு செயல்பட்டதாகவும், மிகத் தெளிவாக மாணவர்களுடன் விரிவாக எடுத்துரைத்தார் . மாற்றுத்திறனாளியாக இருந்து தானே வெற்றி பெற்றேன் என்பதை மாணவர்கள் முன்பாக அவரே கூறும்பொழுது மாணவர்களிடம் நல்லதொரு ஆளுமை தன்மை நம்பிக்கை ஏற்பட்டது. இது மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உந்துசக்தியாக இருந்தது. அவர் பேசிய விஷயங்கள் மாணவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போன்று பதிந்து விட்டது.மாணவர்களுக்கும்,எங்களுக்கும் வாழ்த்து சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.பள்ளி நிகழ்வு குறித்து என்னிடம் பேசும்போது, மாணவர்கள் அருமையாக உள்ளர்க. நல்ல பயிற்சி கொடுத்து உள்ளீர்கள்.புரிதல் தன்மை மிக அருமை.நன்றாக கல்வியை கொண்டு செல்கிறீர்கள் என்று வாழ்த்து தெரிவித்தார்.
தீடிர் ஏற்பாடு
தீடிர் ஏற்பாடாக நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களை அழைத்துச் சென்றோம். இது ஒரு திட்டமிடப்படாத நிகழ்ச்சி. ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன் அவர்களை எங்கள் பள்ளி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்க அப்போது அழைத்திருந்தேன் ..அப்போது கல்லூரி முதல்வர் நந்தகுமார் ஐஆர்எஸ்யிடம் எங்கள் கல்லூரிக்கும் வாருங்கள் என்று ஒரு அழைப்பு கொடுத்தார். அதனடிப்படையில் மதியம் சாப்பிட்டு விட்டு நேராக நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம்.
கண்ணீர் விட்டு அழுத கல்லூரி மாணவர்கள்
45 நிமிடம் கல்லூரி மாணவர்கள் முன்பாக பேசினார் .மாணவர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுது விட்டார்கள். அந்த அளவுக்கு அவருடைய பேச்சு உணர்ச்சிபூர்வமாக , அறிவுபூர்வமாக இருந்தது. வாழ்க்கையில் எவ்வளவோ பேர் கல்லூரியில் படித்து ஓடி விடுவதாகவும், கல்லூரியில் படிக்க முடியாத நிலையில் அது படிப்பதற்கான தன்னிடம் எண்ணங்கள் இருந்தும் தன்னுடைய உடல் நிலை காரணமாக சரியாக எழுதுவது சரியாகப் பேசுவது என்கிற சிரமப்பட்ட நிலையிலும் தான் கல்லூரியில் நல்ல முறையில் வெற்றி பெற்ற விவரத்தை மிகத் தெளிவாக மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். பல மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் . பல மாணவர்கள் அதனை உணர்வுபூர்வமாக எடுத்துக்கொண்டார்கள். இதுதான் அவருடைய பேச்சின் வெற்றி என்றே கூறலாம் . தான் மிக சுமாரான நிலையில் இருந்து வெற்றி பெற்றுள்ளேன் என்பதை வெற்றி பெற்ற பின்பு ஒருவர் கூறும் பொழுது தான் மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைகிறது. நிகழ்ச்சி முடிந்த உடன் நேராக அவருடைய திட்டப்படி மாலை 3 மணி அளவில் கிளம்பி நேராக மதுரை சென்று தனியார் கல்லூரி நிகழ்விலும் கலந்து கொண்டு மறுநாள் சென்னை சென்று என்னிடம் பேசினார். மிகுந்த மகிழ்ச்சியாக பேசினார்.
நல்ல மாணவர்களை இளம் வயதில் உருவாக்கி வருகிறீர்கள் - வாழ்த்துக்கள்
புதிய மாணவர்களை உங்கள் பள்ளியில் கண்டேன்.மிக அருமையாக மாணவர்களை உருவாக்கி உள்ளீர்கள். தொடர்ந்து இதுபோன்ற செயல்படுங்கள் செய்யுங்கள். எங்களால் ஆனா உதவிகளை செய்கிறேன் என்று கூறினார்கள். ஒரு வருடம் கழித்து நண்பர் மூலமாக தொடர்பு கொண்டு சென்னை சென்றபோது என்னுடைய குடும்பத்துடன் அவரை வருமானவரி இணை ஆணையர் அலுவலகத்தில் சென்று சந்தித்தேன்.அங்கு நான் கண்ட மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரிய இரண்டு அறைகளில் அவர் மட்டுமே மிகப் பெரிய அதிகாரியாக அமர்ந்திருந்தார். எங்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக (மாலை ஐந்தரை மணியளவில் சென்றோம்) அன்பாகப் பேசினார். பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் .பள்ளியின் நிகழ்வுகளை ஒரு வருடம் கழித்து மிகத்தெளிவாக என்னிடம் மாணவர்களுடைய நலன் குறித்தும் மாணவர்கள் செயல்பாடுகள் குறித்தும் நினைவில் வைத்து மிகப் பெருமையாக பேசினார். எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது . அவருடைய செயல்பாடுகள், அவருடைய உடல்வாகு, அனைத்தையும் தாண்டி அவர் வெற்றி பெற்றது இந்த உலகிற்கே ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகும். இன்றளவும் நண்பர்களின் வாயிலாக அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன். நல்ல முறையில் பேசி வருகிறார்கள். பல தகவல்களை எங்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார்கள். அந்த ஆளுமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி கலந்த அன்புடன்
லெ .சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653
நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களின் பள்ளி தொடர்பான பேச்சு - வீடியோ
https://www.youtube.com/watch?v=6Sfd-kSBiY0
https://www.youtube.com/watch?v=sPcwenCi8jg&t=11s
பள்ளியில் நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களின் பேச்சு - வலைத்தளம் பதிவு
https://kalviyeselvam.blogspot.com/2016/07/blog-post_30.html#more

No comments:
Post a Comment