மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளி
தேவகோட்டை - தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி சாதனை படைத்துவருகிறது .
பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
மதிய உணவில் அசத்தும் பள்ளி
மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி
சத்துணவு குழு அமைத்து நல்ல முறையில் மதிய உணவு வழங்கும் பள்ளி
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளி
பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி :
அது என்ன புதிய முயற்சி ? தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தான் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த சீனிவாச சௌந்தரராஜன் இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),
தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் :

எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம். ஒவ்வொரு மாணவரும் தூய்மையான கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு சாப்பிடுகிறார்கள்.டவலில் சாப்பிட்டு சிந்தாமல் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர் சொல்லி சந்தோசம் அடைந்தனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைக்கின்றனர் .இதன் மூலம் மாணவர்களிடையே சகோதரத்துவம்வளருகிறது. ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்துசெல்ல வேண்டும்.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடு சொல்கிறோம்.சாதம் எப்படி இருந்தது என்பதை மாணவர்களே என்னிடமும்,சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து சொல்கிறன்றனர்.இது நிச்சயமாக தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்துஐந்து ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறோம். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
பட விளக்கம் : தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி சாதனை படைத்துவருகிறது .
மேலும் விரிவாக :
பெற்றோரின் ஒத்துழைப்போடு
மதிய உணவில் அசத்தும் பள்ளி
மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி
சத்துணவு குழு அமைத்து நல்ல முறையில் மதிய உணவு வழங்கும் பள்ளி
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளி
சாப்பிடும்போது டவல் பயன்படுத்தும் முறை :
சாப்பிடும் இடத்தை சுத்தமாக கூட்டி ,அனைத்து மாணவர்களையும் டவல் கொண்டு வரச்செய்து அதனை விரித்து அதன் மீது தட்டை வைத்து சாப்பிட சொல்கிறோம்.உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட முடித்த பின்பு சத்துணவு ஊழியர்கள் அதனை நல்ல முறையில் சுத்தம் செய்து விடுவார்கள்.முதலில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பு மாணவர்களை டவல் கொண்டு வர வைப்பது சிரமமாக இருந்தது .ஆனால் டவல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களிடம் எடுத்து சொன்னோம்.தொடர்ந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி அனைத்து மாணவர்களையும் அனைத்து நாட்களும் டவல் கொண்டு வர பழக்கி விட்டோம்.இதனால் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர் சொல்லி சந்தோசம் அடைந்தனர்.
சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என பணிபகிர்தல் :
சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என்று பணி பிரித்து கொடுத்து ,தினசரி சமையலுக்கு எடுக்கும் பொருள்களை சரிபார்ப்பது ,காய் வாங்கி வரும்போது அதனையும் பார்வையிட்டு ( வாங்கி வரும் காய்களில் எப்போதாவது பூச்சி இருந்தால் அதனை தவிர்க்க சொல்லியும் ),அரிசியையும் நன்றாக வெந்நீரில் களைந்து ,அதனை உலை வைத்து சாதமாக்குகிறார்கள்.நானும்,மாதத்திற்கு ஒரு ஆசிரியை என்று எங்கள் பள்ளி ஆசிரியையும் பிரித்து கொண்டும் உணவை சமைத்த உடன் சாப்பிட்டு விட்டு அதன் பிறகுதான் பெற்றோர்க்கும்,மாணவர்களுக்கும் உணவை பரிமாறுவோம்.ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் இதனை தொடர்ந்து செய்து வருகிறோம்.
சாப்பிடும்போது சகோதரத்துவத்தை ஏற்படுத்துதல் :
முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு பயிலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் என்னிடம் வந்து மாணவர்கள் சில நாட்கள் சாப்பிடாமல் வருவதாக சொன்னார்கள்.அதன் பிறகுதான் ,எட்டாம் வகுப்பு ,ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கொண்டு முதல்,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அன்புடன் ஊட்டி விட சொல்கிறோம்.இதன் மூலம் இந்த மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரும் என்பது உண்மை.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவை வீணாக்காமல் முழு உணவையும் சாப்பிட வைத்தல் :
சாப்பிடும் அனைத்து மாணவர்களும் சாப்பிட்டு முடித்த பின்பு கண்டிப்பாக அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம் என்று தட்டை சத்துணவு ஊழியரிடமும் ,அன்றைக்கு பொறுப்பில் உள்ள ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.
ஆலோசனைகளை சத்துணவு குழுவில் இருந்து பெறுதல் :
தொடர்ந்து சத்துணவு நல்ல முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக பள்ளி ஆசிரியைகள் ,சத்துணவு அமைப்பாளர்,சமையலர்,உதவியாளர்,பள்ளி மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ முதல்வர் ,துணை முதல்வர்,மற்ற அமைச்சர்கள் ,பெற்றோர் என அனைவரிடமும் கருத்துக்கள் கேட்டு ,மாற்றங்கள் இருந்தாலும் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.அவர்களது ஆலோசனைகள் பல நேரங்களில் நல்ல உதவியாக அமைந்துள்ளது. முதலில் பெற்றோரை வரவழைப்பது சிரமமாக இருந்தாலும் தற்போது இரண்டு வருடங்களாக அனைத்து பெற்றோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பள்ளிக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஆலோசனைகளை சொல்லி செல்கின்றனர். இந்த பணி நல்ல முறையில் நடப்பதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி :
அது என்ன புதிய முயற்சி ? தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தான் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த சீனிவாச சௌந்தரராஜன் இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),
தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் :
No comments:
Post a Comment