Sunday, 8 March 2020

அமெரிக்காவில் இருந்த அலைபேசியில் அழைத்து வாழ்த்திய 85 வயது பெண்மணி 

கடவுள் நம்பர் 1 அன்று,காசுதான் நம்பர் 1 இன்று




மார்ச் 7 ஆம் தேதி அன்று எங்கள் பள்ளியில் உலக மகளிர் தினம் ஆசிரியைகளையும் , மாணவிகளையும் வைத்து நடத்தினோம் அந்த நிகழ்வை மின்தமிழ் குழுமத்தில் பதிவு செய்திருந்தோம் .அதன் தொடர்ச்சியாக மாலை 4 மணி அளவில் அமெரிக்காவிலிருந்து பேசிய எட்டையபுரம் சீதாலட்சுமி 85 வயதில் கணீரென்று பேசி வாழ்த்து தெரிவித்தார்.

            சீதாலட்சுமி அவர்கள் இன்று யாரையாவது வாழ்த்த வேண்டும் என்று எண்ணியபோது, மின்இதழ் குழுமத்தில் எங்கள் பள்ளியின் மகளிர்தின விழா நிகழ்வை பார்த்ததாகவும் அந்த தகவலுக்காக  என்னை பாராட்டுவதாகவும் கூறினார் .தனக்கு வயது 85 ஆகிறது என்றும் இருந்தபோதும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமூகவியல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா மாவட்டத்திலும் பணிபுரிந்து மகளிர் தினத்தை மிகச்சரியாக கொண்டாடியதாக பெருமையுடன் கூறினார். எட்டயபுரம் சீதாலட்சுமி என்றால் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறியிருந்தார் .மகளிர் தினத்தில் கொண்டாடுவது தொடர்பாக வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது மின்னிதழ் குழுமத்தில் பார்த்தவுடன் எனக்கு தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அனைத்து பத்திரிக்கைகளிலும் தான் எழுதி உள்ளதாகவும் கூறினார். தற்போது மாணவர்கள் அதிகமாக ஃபோன் பார்ப்பது தவறு என்று கூறினார். இரவு சாப்பிடும்போது  அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறினார். தற்பொழுது உள்ள மகளிர் இடம் அதிகமான அளவு கடமை உணர்வு இன்னும் அதிகமாக வர வேண்டும் என்றும் கூறினார் .இன்றைய நிலையில் கடவுள் நம்பர் ஒன் கிடையாது என்றும், காசுதான் நம்பர் ஒன் என்றும் கூறினார்.

பல்வேறு நாளிதழ்களில் கதைகள் எழுதி பரிசு பெற்றதாகவும் கூறினார் .இன்னும் பல்வேறு விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் 15 நிமிடங்களுக்கு மேலாக என்னுடன் கலந்துரையாடினார். ஆகஸ்ட் மாதம் தமிழகம் வரும் பொழுது என்னை சந்திப்பதாகவும் கூறினார் .தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறினார் .ஜெர்மனி சுபாஷினி அவர்களின் மூலமாக என்னுடைய  தொடர்பு ஏற்பட்டது என்றும் அவர்கள் மிகவும் நல்ல பல செயல்கள் செய்து வருவதாகவும் என்னிடம் பாராட்டினார் .காரைக்குடியில் காளைராஜன் அவர்களை நன்றாக தெரியும் என்றும் என்னிடம் தெரிவித்தார் .85 வயதில் கணீரென்ற குரல் உடன் என்னுடன் அவர்கள் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .மகளிர் தினம் கொண்டாடியதற்காக  அமெரிக்காவில் இருந்து எனக்கு வாழ்த்து கிடைத்ததற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றிகளுடன் 
லெ . சொக்கலிங்கம்,
 தலைமை ஆசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.






No comments:

Post a Comment