சமூக விலகலும் தனிமையில் இருத்தலும்
சாமனியனின் அனுபவ பகிர்வு
ஐந்தாம் நாளாக தொடர்ந்து வீட்டுக்குள் இருக்கும் அனுபவம்
அனுபவ பகிர்வு நாள் - 29-03-2020 இரவு மணி 10.30 PM
நண்பர்களே தயவு செய்து தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
ஒண்ணுமே புரியலே , உலகத்திலே- எது நடந்தாலும் நன்மைக்கே!
வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் எப்படி?
நண்பர்களுக்கு வணக்கம் . கடந்த செவ்வாய்க்கிழமை 24/03/2020 மாலை நாலு மணி அளவில் வீட்டிற்கு வந்தவன் தான் இதுவரை வெளியில் செல்லவில்லை .இடையில் ஒரு முறை காய்கறி கடைகள் மற்ற கடைகள் திறந்து இருக்கிறதா என்பதற்காக வெளியில் சிறிது தூரம் சென்று வந்தேன். வீட்டிற்குள்ளேயே கடந்த 5 நாட்களாக இருப்பது மிகப் பெரிய விஷயமாதான் இருக்கிறது. ஏனென்றால் தினசரி பல்வேறு அலுவலுக்காக வெளியில் சென்று வந்த நம்மால் தொடர்ந்து பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது என்பது மிகப் பெரிய வேலையாகத் தான் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. ஆனால் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது இதுபோன்ற தனிமையில் இருப்பது மிகவும் தேவையான ஒன்று தான் என்று தோன்றுகிறது .கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொலைக்காட்சிகளிலும் ,வாட்சப் மூலமாகவும் , முகநூல் வழியாகவும் நாம் காணும் விஷயங்கள் பதர வைக்கின்றது .
பதற வைக்கும் மக்கள் கூட்டம் - யார் காப்பற்றுவார்கள் ?
எனது நண்பர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியில் சென்று விட்டு காய்கறிகளும் இறைச்சியும் வாங்கி வருவதாக கூறினார் .இன்று கூட மீன் வாங்கி வந்ததாக கூறினார் .மீன் வாங்கி விட்டு காய்கறி கடைகள் இருக்கும் பக்கம் சென்று மிகப்பெரிய ஒரு ரவுண்ட் அடித்ததாக கூறினார். இறைச்சிக் கடைகளில் அதிகமான அளவு மக்கள் வந்து வாங்கி செல்வதாகவும் தெரிவித்தார் .இன்று தொலைக்காட்சியில் பார்த்த பொழுது அதிகமான மக்கள் மதுரையில் இறைச்சிக் கடைகளில் கூடி இருந்ததை பார்க்க முடிந்தது. காய்கறி போன்ற பொருட்கள் அத்தியாவசியம். அது போன்ற பொருட்களை வாங்குவதற்கு இடைவெளிவிட்டு வட்டம் போட்டு அரசு சொல்லும் செயல்பாடுகளை பின்பற்றும் மக்கள் இறைச்சி கடைகளில் மிகப் பெரும் கூட்டமாக இருப்பதை பார்த்தால் மனது பதறுகிறது .
வீடுகளுக்கே ஜமான்கள் வந்தால் கூட்டம் கூடுவது குறையும் - அது எப்படி ?
மதுரையில் மாநகராட்சி யோசனையில் வீட்டிற்கே சென்று மளிகை சாமான்களையும் காய்கறியும் கொடுப்பது போன்று ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் . அதுபோன்று அரசு தோட்டக்கலை மூலமாகவும், தனியார் நிறுவனங்களின் உதவியுடனும் காரைக்குடி, தேவகோட்டை போன்ற பகுதிகளில் அங்கு உள்ள நகராட்சிகள் மூலமாகவும் வீட்டிற்கே சென்று மளிகை பொருட்களையும் காய்கறிகளும் கொடுக்கும் வண்ணம் சில ஏற்பாடுகளை செய்தாலும் இன்னும் இன்னும் சிறப்பாக இருக்கும். அதுபோன்று நடைபெறாத சூழ்நிலையில்தான் தொடர்ந்து மக்கள் கூடும் இடமாக மாறுகின்றது பல்வேறு இடங்கள் . மக்களும் என்னதான் செய்வார்கள் . அவர்களும் தினசரி சாப்பிடவேண்டும். அதற்கான காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அரசும் இன்னும் அதிகமான ஒத்துழைப்பை மக்களுக்கு நல்கினால் நலம் பயக்கும். அதேவேளையில் இன்னும் அதிகமான ஒத்துழைப்புகளை மக்களும் அரசுக்கு வழங்கி அதிகமாக கூடுவதை தவிர்த்தால் மிகுந்த உதவியாக இருக்கும்.
மனித நேயம் கசிந்து போகும் நிலையில் மக்களின் வாழ்க்கை
தனிமையில் இருப்பது என்பது சிரமமான காரியம் தான். இந்த ஒரு வார காலத்தில் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் எண்ணிப் பார்த்து அது தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்து கொண்டு உள்ளேன். பல்வேறு பணிகளுக்கிடையில் மருத்துவர்களும், செவிலியர்களும் ,காவல்துறையினரும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களுடன் மக்களாக பணிபுரிவது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கின்றது. தனித்திரு விழித்திரு என்கிறார்கள் .அவசியம் தனித்து நிற்க வேண்டும் .விழித்தும் இருக்க வேண்டும். ஆனால் பசியோடு தொடர்ந்து இருக்க முடியாது. பசியைப் போக்குவதற்காக தான் மக்கள் மிக அதிக அளவில் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .இன்று காலை எனது நண்பர் ஒருவர் தனது மனைவிக்கு தலை சுற்றுகிறது என்கிற காரணத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் ,வெளியில் பால் கூட கிடைக்கவில்லை என்று கூறினார். அதை பார்க்கும் பொழுது எங்களுக்கு மிகுந்த அச்சம் ஆகத்தான் இருந்தது .ஏனென்றால் எங்கு பார்த்தாலும் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள், யாருடனும் கை கொடுக்காதீர்கள், யாருடனும் தொடர்பு ஏற்படுத்தாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றோம் .அவரோ ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தேன் மருத்துவமனைக்கு சென்று வந்தேன் என்று கூறினார். சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் நெஞ்சை தொட்டது.காவல்துறையில் உள்ள ஒருவர் வீட்டிற்கு வெளியே சாப்பிடுவதும், குடும்பம் நீண்ட தூரத்தில் நின்று பார்ப்பதையும் கவனித்தோம் . இந்த சூழ்நிலையில் மனித நேயத்துடன் யாருக்கும் உதவி செய்வது தொடர்பாக சிந்திக்க வைப்பது சிரமமாக இருக்கிறது .
விழிப்புணர்வு இருந்தும் செவிசாய்க்க மறுக்கும் மக்கள் - ஏனோ ?
இன்னும் சில நண்பர்கள் அன்பாக போன் செய்து சில முதியவர்கள் மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அவர்கள் வீடுகளில் கூலி வேலை பார்க்கிறார்கள். எனவே அவர்களுக்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது கொடுக்க முடியுமா? என்று கேட்டார்கள். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை. இன்றைய நமது நிலைமையும் கூட இப்படித்தான் இருக்கிறது .எனவே நண்பர்களே நன்றாக பழகியவர்களை கூட மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்றால் நமக்கு மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்த அச்ச உணர்வே நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் போலிருக்கிறது. நண்பர்கள் ,தெரிந்தவர்கள் ,வயதானவர்கள் ஆகிய அனைவருக்கும் நாம் ஏதேனும் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் கூட எவ்வாறு அந்த உதவிகளை அவர்களுக்கு செய்வது என்கிற பயமும் இருக்கின்றது. சில நண்பர்கள் முகநூலில் கூறும்போது, இத்தாலியில் இதுபோன்று சொல் பேச்சை கேட்காமல் பலரும் வெளியே சென்றதால் மிகப்பெரிய ஆபத்துக்கள் வந்ததாக தெரிவிக்கின்றார்கள் . ஆனால் தமிழ்நாட்டிலோ மக்கள் கூட்டம் கூட்டமாக எங்கு பார்த்தாலும் செல்வதை காணும்போது மிகவும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .மக்களும் நன்றாக இருக்கவேண்டும் . அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது அனைவரையும் பாதிக்கும் என்பதே மிகப்பெரிய வருத்தத்துக்குரிய விஷயம் ஆகும். எனவே மக்கள் அனைவரும் முடிந்தளவு வீட்டிற்குள்ளே இருந்தால் அவர்கள் குடும்பத்திற்கும் நலம். நாட்டுக்கு நலம். என்பதே உண்மை .இதனுடைய தீவிரம் தெரியாமல் எப்படி மக்கள் இருக்கிறார்களா? என்பது ஆச்சரியமான விஷயம். அனைத்து தரப்பு மக்களும் இன்று நன்றாக டிவி பார்க்கிறார்கள், ரேடியோ கேட்கிறார்கள், வாட்ஸ்அப் பார்க்கிறார்கள், முகநூல் பார்க்கிறார்கள், இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் மீண்டும் மீண்டும் கூட்டமாக செல்வது எப்படி என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. தனக்கு ஒன்றும் நிகழாது என்கிற ஆணவத்தில் இருக்கிறார்களா அல்லது தெரியாமல் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .எனவே முடிந்த அளவு மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தி தனித்திருந்தால் அனைவருக்கும் நலமாக இருக்கும் .
இணையத்தில் வரும் தகவல்கள் எது உண்மை? எது பொய் ? குழப்பும் பல தகவல்கள்
உண்மையில் ஒரு சிறிய வைரஸ் கிருமி உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது அதனை எண்ணிப் பார்க்கும் பொழுது நமக்கு பல்வேறு விஷயங்கள் புரிகிறது. வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் பல்வேறு புதிய புதிய தகவல்கள் கொரோனா வைரஸ் பற்றி வந்து கொண்டே இருக்கின்றது .இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை .இருந்தாலும் எதைப் படித்தாலும் நாம் அதை உள்வாங்கி அதனுள் ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டே இருக்கின்றோம் இதற்கு முடிவு எப்போது ? தீர்வு எப்போது ? என்பது தெரியவில்லை. என்ன ஆகும் என்பதும் தெரியவில்லை. சில நண்பர்கள் ஜூலை ஆகும் என்கிறார்கள், ஜூன் ஆகும் என்கிறார்கள். எப்பொழுது இதற்கான முடிவு என்பதும் தெரியவில்லை. எனவே முடிந்த அளவு இந்த நாட்களில் மற்றவர்களுடன் கூடாமல் தனித்திருந்து விழித்திருந்து அனைவரும் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.
இறைச்சிக்காக கூடும் மக்கள் - அடுத்தவருக்கும் நோய் பரப்ப வாய்ப்பு
இறைச்சிக் கடைகளில் ஏன் மக்கள் இவ்வளவு தூரம் கூடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கே தனித்து இருக்க தவறுகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது .காய்கறிகள் இருந்தால் நமது வாழ்க்கையை நகர்த்தி கொள்ளலாம். ஆனால் இறைச்சி இல்லாமல் நான் இருக்க மாட்டேன் என்கிற சிந்தனையோடு மக்கள் இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது .எனவே முடிந்த அளவு மக்களே தனித்து இருங்கள் விழித்திருங்கள் உங்களுக்கும் அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது ,நாட்டுக்கும் நல்லது
காய்கறிகள் இல்லாமலும் சாப்பிட பழகி கொண்டோம்
ஊரடங்கு உத்தரவு காலத்தில் தனித்து இருக்கும் நாட்களில் சில நேரங்களில் வீட்டில் காய்கறிகள் கூட இல்லாமல் சென்று விட்டது. ஆனால் நாங்கள் அதற்காக காய்கறி வாங்குவதற்காக உடனே வெளியில் செல்லவில்லை .வீட்டில் இருக்கும் பட்டாணி ,பருப்பு ,பயிறு வகைகளை பயன்படுத்தி அதை உணவாக மாற்றி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் .வேண்டுமானால் ரசம் வைத்து கொள்கின்றோம். இதுபோன்று எங்களுடைய தேவைகளை சரி செய்துகொண்டு வாழ்ந்து வருகிறோம். எனவே நங்கள் வீட்டில் இருக்கிறோம்.
கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம் இந்தியாவை - நம்மால் முடியும்
மேலும் நேற்று தொலைக்காட்சிகளில் டெல்லியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் சுமைகளை சுமந்து செல்லும் காட்சிகளும், கோயமுத்தூரில் 200க்கும் மேற்பட்ட வடநாட்டவர் உணவில்லாமல் இருந்த நிலைமைகளையும் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருந்தது. நம் தமிழகத்திலும் அடி தட்டு மக்களின் வாழ்க்கை சூழல் எண்ணினால்அச்சமாகத்தான் உள்ளது. அவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிரமப்படுவார்கள். இது போன்ற சூழ்நிலைகளை சரி செய்ய அரசும் நல்ல முறையில் செயல்படுகிறது. இருந்த போதிலும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இதுபோன்ற இடர்பாடுகளையும் சரி செய்து மக்களுக்கு முடிந்தளவு உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் . எனவே முடிந்த அளவு நாம் வீட்டிற்குள் தனிமையில் இருப்பது மிகுந்த உதவியாக இருக்கும். காவலர்களும் எவ்வளவோ முயற்சிகளை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் நம்மவர்களும் பல்வேறு தகவல்களைச் சொல்லிவிட்டு வெளியில் செல்வதையே மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறார்கள். எனவே இந்த நிலை மாறவேண்டும் .இந்த நிலை மாறி கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடு இந்தியா என்கிற நிலை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நன்றி .
பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக பிப்ரவரி 6ம் தேதி அன்று எங்கள் பள்ளி மாணவர்களுக்குகொரனோ வைரஸ் தொடர்பாக தேவகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் முத்து வடிவு அவர்களை அழைத்து வந்து தெளிவாக இது குறித்த விழிப்புணர்வு கொடுத்தோம். அனேகமாக தமிழகத்தில் முதன்முதலாக வைரஸ் தொடர்பாக ஏற்படுத்திய விழிப்புணர்வு எங்களது பள்ளியில் தான் இருக்கும் என்று எண்ணுகின்றேன். அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கைகளை கழுவுவது எப்படி என்று அரசு கொடுத்திருந்த கை கழுவும் முறைகள் தொடர்பான விவரங்களையும் மாணவர்களுக்கு கொடுத்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அவர்களது ஏற்பாட்டிலும்கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினோம். மாணவர்களும் அவர்கள் வசிக்கும் வீதிகளில் சென்று மிக அதிக அளவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாகவும் , கை கழுவும் முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கினார்கள் . அதற்கு பிறகுதான் நோய் தாக்குதல் தெரிந்து அரசும் இது போன்று ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்திருந்தது .எனவே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நேரத்தில் இன்னும் அதிகமான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணமாகும்.
அனுபவ பகிர்வு
லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி .

No comments:
Post a Comment