கேள்வி : மாணவி நதியா : ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது?'
பதில் :ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.:
ஜிஎஸ்டி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகத் தான் அமைந்துள்ளது .எப்படி என்றால் நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது முன்பெல்லாம் ஒரு வரி விதிப்பார்கள். அதனை சந்தைப்படுத்தும் பொழுது அதற்கு ஒரு வரி விதிப்பார்கள் .குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் நம்முடைய மற்ற மாநிலங்களில் இருந்து தயாராகி செல்லும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிப்பார்கள் .அந்த நுழைவு வரி அதிகமாக இருக்கும் .அது போன்று இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரே வரி என்கிற அடிப்படையில் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு மூலமாக தற்போது உள்ளூரில் வாங்க கூடியவர்களுக்கு நன்மை செய்வதாக இந்த ஜிஎஸ்டி வரி அமைகின்றது. எனவே ஜிஎஸ்டி வரி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகவே அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி பொதுவாக 5%, 8%, 12 சதவிகிதம் ,18%, 28% என்கிற முறைகளில் விதிக்கப்படும். 28 சதவீதத்துக்கும் மேலாக ஜி எஸ்.டி.வரி விதிக்கிறார் என்றால் அது நிச்சயமாக தவறான வரியாகத்தான் இருக்க வேண்டும் .விவசாயத்திற்கு ,வேளாண்மைக்கு ஜீரோ சதவிகிதம் ஜிஎஸ்டி என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்- அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் - ஐ.ஆர்.எஸ்.பேச்சு
சுங்கவரித் துறை துணை ஆணையாளர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்
மத்திய பெட்ரோலியத் துறை சான்றிதழ்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியத் துறையின் சார்பில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது .
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .விழாவில் திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளர் ஆர் . பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். பங்கேற்று ஓவிய போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் , குறிக்கோளை அனைத்து மாணவர்களும் இளம் வயதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற்றவர்களாக ஒரு காலத்தில் மாறமுடியும். நான் இளம் வயதில் குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டதால் மிகப் பெரிய பதவிக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதால் இன்று உங்கள் முன்பாக திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளராக நின்று பேசிக்கொண்டு உள்ளேன். நீங்களும் அதுபோன்ற வாழ்க்கையில் இளம் வயதில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து நன்றாகப் படித்து மிகப் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயமாக முடியும் என்று பேசினார்.மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் சார்பில் சுற்றுப்புறச் சூழலை வளமாக வைத்துக் கொள்ளும் வகையில் எண்ணெய் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரையில் ஜோயல் ரொனால்டோ, தமிழ் கட்டுரையில் கீர்த்தியும், ஓவிய போட்டியில் பாலமுருகன், வெங்கட்ராமன், அஜய் பிரகாஷ், ஐஸ்வரியா ஆகியோரும் சான்றிதழ்களை பெற்றனர் . நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி சுங்கத்துறை துணை ஆணையாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். மாணவ,மாணவியர்க்கு மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
ஜி.எஸ்.டி .என்றால் என்ன? தெளிவான விளக்கம் தரும் சுங்கவரி துறை துணை ஆணையாளர் ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.- வீடியோ
https://www.youtube.com/watch?v=nrvsu7cyxuI
மேலும் விரிவாக :
ஐ.ஆர்.எஸ்.பாலசுப்ரமணியன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
கேள்வி : மாணவன் ஐயப்பன் : துணிக்கடையில் துணி வாங்கும் பொழுது 40 ரூபாய்க்கு துணி வாங்கினால் ஜிஎஸ்டி வரி போட்டு கொடுக்குறாங்க. அந்த வரி அரசுக்கு எப்படி போய் சேரும்?
பதில் : பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ்.:
அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பொழுது ஒவ்வொரு துறைக்கும் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் .அது போன்று ஒவ்வொரு கடையிலும் நீங்கள் வரி கட்டும் பொழுது அந்த கடைக்கு என்று ஜிஎஸ்டி எண் கொடுத்திருப்பார்கள். அந்த எண்ணில் தான் பணம் செலுத்தபடுகிறதா என்பதை நாங்கள் சரி பார்த்து விடுவோம். எனவே நீங்கள் கட்டும் தொகை அந்த எண்ணுக்கு தான் சென்று அடையும். அதில் எந்த மாற்றமும் இருக்காது .தவறான எண்ணாக இருந்தால் ஆன்லைன் மூலமாக நீங்களே சென்று அதனை சரிபார்த்து கொள்ளலாம். ஜிஎஸ்டி என்று டைப் செய்து அந்த எண்ணை கொடுத்தால் அந்த என் இருக்கிறதா, இல்லையா, எந்த இடத்திற்கான சொந்தக்காரர், என்கிற விவரங்களை அதில் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதில் பணம் செலுத்தி உள்ளார் என்கிற தகவலையும் நாம் அதன் மூலமாக அறிந்துகொள்ள முடியும் .
கேள்வி : மாணவி சுரேகா : ஜிஎஸ்டி அரசாங்கத்திற்கு எந்த வகையில் நன்மை செய்யக்கூடியதாக இருக்கின்றது?
ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ். பதில் :
இந்தியாவில் வரி இரண்டு முறைகளில் வசூல் செய்யப்படுகிறது .அதாவது நேர்முக வரி, மறைமுக வரிஆகும். நேர்முக வரி என்பது ஒரு அலுவலர் பணியில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு வகைகளில் சம்பாதிக்கும் போது அவருடைய பணத்தை வருமான வரியாக செலுத்துகின்றார் . இது நேர் முகவரியாகும். மறைமுக வரி என்பது பல்வேறு விதங்களில் நமது நாட்டை கொண்டு செல்ல தேவைப்படக்கூடியபணத்திற்கான வரி ஆகும். நமக்கு தேவையான பொதுத்துறை நிறுவனங்களான மருத்துவமனை , அரசு சார்ந்த பள்ளிக்கூடங்கள்,. அரசு சார்ந்த நிறுவனங்களை நாம் செலுத்துவதற்காக பணம் இருந்தால்தான் நாம் அதை செலுத்த முடியும் அதற்கு ஏதுவாக மறைமுக வரி வசூலிக்கப்படுகிறது .அதுதான் ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்படுகிறது .முன்பெல்லாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரியான வரி வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி வந்தது பிறகு ஒரே குடையின் கீழ் ஒரே நாடு ஒரே சந்தை என்கிற முறையில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்து அதனை மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அரசுத்துறை அலுவலர்கள் மூலமாக அரசு செய்து வருகிறது.
கேள்வி : மாணவர்அஜய் பிரகாஷ்: சுங்க வரி என்றால் என்ன ?
பதில் : பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.: சுங்க வரி என்பது மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ,ஒரு பேனா இந்தியாவில் 25 உருவாக்கி தயார் செய்து விற்கப்படுகிறது வைத்துக்கொள்வோம். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பேனா வெறும் பத்து ரூபாயில் விற்கக் கூடியதாக இருக்கலாம். அப்படியானால் நாம் எந்த பொருளை அதிகமாக வாங்குவோம். பத்து ரூபாய் உள்ள பொருளை தான் வாங்குவோம். அப்படி பத்து ரூபாய் உள்ள பொருளை வாங்கும் பொழுது உள்நாட்டில் 25 ரூபாய்க்கு தயாரிக்கும் பொருள் விற்பனையாகாமல் சென்று விடும் .அதனால் தயாரிப்பாளர் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள். எனவே உள்நாட்டு சந்தை மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பத்து ரூபாய் பொருளுக்கு 20 ரூபாய் சுங்க வரி செலுத்தி அதன் மூலமாக நாம் 30 ரூபாய்க்கு அதை விற்க செய்யும்பொழுது உள்ளூர் சந்தை மிக அதிக அளவில் விற்கப்படும் .அதனால் நம் நாட்டு மக்களும் அதிக அளவில் பயன் பெறுவார்கள் .இதற்காகத்தான் சுங்க வரி விதிக்கப்படுகின்றது .காந்தி இதைத்தான் முன்பே சொன்னார். உள்ளூர் பொருட்களை அதிகமாக வாங்கி கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பொருள்களை தீ வைத்து எரித்தார் . அதுபோன்றுதான் தற்பொழுது சுங்க வரியின் மூலமாக நாம் உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்கு வதற்கு ஏதுவாக இந்த சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது .அரசுக்கு சுங்கவரி விதிப்பின் மூலமாக உள்நாட்டில் தயாரிக்கக் கூடிய பொருட்களின் வரவேற்பு மிக அதிகமாக இருக்கும் என்பதே அவர்களுடைய முக்கிய நோக்கமாகும் .
கேள்வி : மாணவி நதியா : ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது?'
பதில் :ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.:
ஜிஎஸ்டி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகத் தான் அமைந்துள்ளது .எப்படி என்றால் நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது முன்பெல்லாம் ஒரு வரி விதிப்பார்கள். அதனை சந்தைப்படுத்தும் பொழுது அதற்கு ஒரு வரி விதிப்பார்கள் .குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் நம்முடைய மற்ற மாநிலங்களில் இருந்து தயாராகி செல்லும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிப்பார்கள் .அந்த நுழைவு வரி அதிகமாக இருக்கும் .அது போன்று இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரே வரி என்கிற அடிப்படையில் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு மூலமாக தற்போது உள்ளூரில் வாங்க கூடியவர்களுக்கு நன்மை செய்வதாக இந்த ஜிஎஸ்டி வரி அமைகின்றது. எனவே ஜிஎஸ்டி வரி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகவே அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி பொதுவாக 5%, 8%, 12 சதவிகிதம் ,18%, 28% என்கிற முறைகளில் விதிக்கப்படும். 28 சதவீதத்துக்கும் மேலாக ஜி எஸ்.டி.வரி விதிக்கிறார் என்றால் அது நிச்சயமாக தவறான வரியாகத்தான் இருக்க வேண்டும் .விவசாயத்திற்கு ,வேளாண்மைக்கு ஜீரோ சதவிகிதம் ஜிஎஸ்டி என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி : மாணவி ஜனஸ்ரீ : உங்களின் மறக்கமுடியாத அனுபவம் என்ன?
பதில் : வேலை பார்க்கும்போது மறக்கமுடியாத அனுபவம் சுங்கத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சிபிஐயில் என்னுடைய விருப்பமாக மூன்று ஆண்டுகள் சேர்ந்து பணியாற்றினேன்.அவ்வாறு பணியாற்றும் போது டெல்லியில் நான் விசாரித்த ஒரு விசாரணை தொடர்பான அனுபவம் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்து இருந்தது என்று கூறினார்
கேள்வி : மாணவி நதியா : ஜி எஸ் டி யின் விரிவாக்கம் என்ன ?
பதில் : ஜிஎஸ்டி என்பது பொருள்களின் மீதான சேவை வரி. பொதுவாக நாம் அரசு பேருந்தில் செல்லும் பொழுது அதற்கு எந்தவிதமான வரியும் கிடையாது. ஆனால் ஏசி பஸ்களில் ஆம்னி பஸ்களில் செய்யும்போது அதற்கு வரி உண்டு.ஏனென்றால் . நாம் சாதாரண மக்களை விட கொஞ்சம் மேலானவர்கள் என்கிற எண்ணத்தில் அந்த வரி விதிக்கப்படுகிறது .அதேபோன்று ரயில் வண்டியில் நீங்கள் செல்லும் பொழுது சாதாரண பயணத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் ஏசி பயணத்திற்கு ஜிஎஸ்டி உண்டு. ஏனென்றால் நீங்கள் மேலானவர்கள் என்கிற நிலையில் அந்த வரியானது விதிக்கப்படுகின்றது .
பிஎஸ்என்எல் இல் நீங்கள் ஒரு தொலைபேசி வாங்கும்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு அதை வாங்கினால் 100 ரூபாய் வரி விதிக்கப்படும். அந்த நூறு ரூபாய் வரி அவர்கள் மீண்டும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இது போன்று பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தான் ஒரே நாடு ஒரே வழி ஒரே குடையின் கீழ் தற்போது ஜிஎஸ்டி ஆனது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கேள்வி :மாணவர் அய்யப்பன் : ஐ.ஆர்.எஸ்.ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?
பதில் : அதற்கு மத்திய அரசின் தேர்வுகள் இருக்கின்றது .அந்த மத்திய அரசுக்கான தேர்வுப் பணிகளை நாம் எழுதி அதில் முதலாவதாக வந்து விட்டால் நாம் விரும்பும் ஊருக்கு பணிக்கு சென்று விடலாம். ஆனால் முதல் 150 இடங்களில் நீங்கள் 149 இருந்தால் அவர்கள் கொடுக்கும் இடத்திற்குச் செல்லவேண்டும். எப்பொழுதுமே நான்தான் நம்பர் ஒன் என்கிற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் தான் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைய முடியும் எனவே முதலாவது என்கிற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய பணிகளுக்கு செல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் வழங்கினார்
No comments:
Post a Comment