சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு
21 பரிசுகளை வென்று சாதனை செய்த பள்ளி
21 பரிசுகளை வென்று சாதனை செய்த பள்ளி
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை சௌபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று 21 பரிசுகளை வென்று சாதனை செய்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .முதல் பரிசினை பெற்ற மாணவர்களான முதல் வகுப்பு முகல்யா ,மூன்றாம் வகுப்பு ஜெயஸ்ரீ,ஐந்தாம் வகுப்பு கிஷோர்குமார்,எட்டாம் வகுப்பு உமாமகேஸ்வரி ஆகியோருக்கும், இரண்டாம் ,மூன்றாம் பரிசுகளை பெற்ற மாணவர்களுக்கும்,பயற்சி அளித்த ஆசிரிய,ஆசிரியைகளுக்கும் நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி விடுமுறை நாளன்று நடைபெற்ற இப்போட்டிக்கு பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் அவர்களால் போட்டிக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் பள்ளி ஆசிரியை மாணவர்களை போட்டிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று 21 பரிசுகளை வென்று சாதனை படைத்த மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பரிசு பொருள்களுடன் மாணவர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment