Monday, 2 October 2017

வெங்கட்ராமன்  - 82

சந்தியா  - 73

காயத்ரி  - 67



ஸ்வேதா  - 62

சந்தியா  - 58

புகழேந்தி  - 54


இது என்ன மதிப்பெண்களா? இல்லை.


புதிய முறையில் டெங்கு விழிப்புணர்வு 


பள்ளி மாணவர்களின் புதிய முயற்சி 

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்குதல்  

முதல் பருவ விடுமுறையினை சமுதாய விழிப்புணர்வுக்காகவும்,தங்களின் சுற்றுப்புறம் 
தூய்மைக்காகவும் பயனுள்ளதாக மாற்றி அசத்திய மாணவர்கள் 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்   புதிய முறையில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

                         தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் புதிய முறையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களிடமும்,பெற்றோர்களிடமும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் பகுதி மக்களிடம் டெங்கு வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

                   பரிசு வழங்கும் நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.முதல் பருவ தேர்வின் விடுமுறையில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்கள் வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ,துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் கொடுத்து படிக்க செய்து அதற்கு கையெழுத்தும் பெற்று வந்துள்ளனர்.தேவகோட்டை நகராட்சி சார்பில்  சில நாட்களுக்கு முன்பு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசுரங்களை முதல் பருவ தேர்வு விடுமுறை நாட்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு விடுமுறை நாட்களில் அவர்களின் வீடுகளின் சுற்றி உள்ளவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் அவர்கள் வீடுகளின் அருகே உள்ள பொது மக்களிடம் மற்றும் தங்களின் பெற்றோரிடமும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.அனைத்து மாணவர்களும் குறைந்தது 20 பேரிடமும்,அதிகபட்சமாக வெங்கட்ராமன்  என்கிற மாணவர் 82 பேரிடமும் காண்பித்து விழிப்புணர்வை ஏறபடுத்தி உள்ளார்.அதிகமான பொதுமக்களை சந்தித்து விளக்கம் அளித்த வெங்கட்ராமன் ,சந்தியா ,காயத்ரி ,ஸ்வேதா,சந்தியா,புகழேந்தி ஆகிய மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.சிறு வயதில் உள்ள இளம் வயது முதல்,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏறபடுத்தி உள்ளதை பகுதி மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

                      இந்த கல்வி ஆண்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரண்டு சுற்றுக்களாக நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
                             முதல் பருவ விடுமுறையினை சமுதாய விழிப்புணர்வுக்காகவும்,தங்களின் சுற்றுப்புறம் தூய்மைக்காகவும் பயனுள்ளதாக மாற்றியதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் துண்டு பிரசுரங்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில்  டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்.


இது குறித்து மாணவர்களின் கருத்துக்கள் :

வெங்கட்ராமன் : டெங்கு தொடர்பாக பள்ளியின் அருகே உள்ள எங்கள் வீட்டின் வாசலில் நின்று கொண்டு காலையில் நடந்து செல்லும் அனைவரிடமும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக விளக்கி சொன்னேன்.எங்கள் வீட்டின் அருகே உள்ள குப்பைகளை அகற்றுதல்,அது தொடர்பாக அவர்களிடம் எடுத்து சொன்னேன்.நானும் சுத்தமாக இருந்து கொசுக்கள் வராமல் பார்த்து கொள்வேன் என்று சொன்னார்.

காயத்ரி : எங்கள் வீட்டின் அருகே உள்ள சாந்தி அத்தையிடம் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக விளக்கி சொன்னேன்.அவர்கள் ஆர்வமுடன் இதெல்லாம் உங்கள் பள்ளியில் சொல்லி தருகிறார்களா என ஆச்சரியத்துடன் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.இன்னும் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அனைவரிடமும் சொன்னேன்.எங்கள் வீட்டிலும்,எங்கள் வீட்டை சுற்றியும் குப்பை இல்லாமல் பார்த்து கொள்வதுடன் டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.இவ்வாறு பேசினார்.


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளியில் சுற்றி உள்ள பகுதிகளில் தூய்மை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பாக பொது மக்களிடமும் ,பெற்றோரிடமும் விளக்கி பேரணி நடத்தினோம்.அரசு மருத்துவர்களை அழைத்து வந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தினோம்.தேவகோட்டை நகராட்சி தொடர்பாக வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம் இந்த ஆண்டு மட்டும் 10 நாட்கள் இரண்டு சுற்றுக்களாக அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.முதல் பருவ தேர்வின்போது மாணவர்களிடம் டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி அதனை அவர்கள் வசிக்கும் பகுதியில் காண்பித்து விளக்கம் கொடுத்து அதனில் கையெழுத்தும் பெற்று வந்தால் பரிசு என்று அறிவித்தோம்.அதன் தொடர்ச்சியாக இன்று முதல் பருவ தேர்வு முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்த உடன் காலை வழிபாட்டு கூட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் டெங்கு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளதை அறிந்தோம்.அதனில் அதிகமானோர் பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம்.பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தூய்மை தொடர்பாக சொல்லும்போது அவர்களும்,அவர்களது சுற்று புறத்தில் உள்ளவர்களும் அதனை கேட்பார்கள்.மாணவர்களும் இளம் வயதில் நல்ல பழக்கங்களை கற்று கொள்வதுடன் இளம் வயதில் விழிப்புணர்வு அடைவது பசுமரத்து ஆணி போல் மனதில் பதியும்.











No comments:

Post a Comment