Tuesday, 3 October 2017

விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பு


  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  வழங்கும் விழா


தேவகோட்டை – முதல் பருவ விடுமுறைக்கு பின்பு இரண்டாம் பருவத்தின் முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கப்பட்டன.மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.




                                                                    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி திறந்த உடன் மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கப்பட்டன.விழாவிற்க்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிகழ்விற்கு தலைமை தாங்கி மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கினார் .நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவ,மாணவியர்க்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கினார்.

No comments:

Post a Comment