நகராட்சியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டை நகராட்சியில் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .
நிகழ்வில் பள்ளி ஆசிரியர் முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.இப்பள்ளி மாணவர்கள் தேவகோட்டை நகராட்சி சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆங்கிலத்தில் தேசிய புரட்சிகள் தொடர்பாக பேசிய கார்த்திகேயன்,வந்தே மாதரம் பாரதியும் நாட்டு விடுதலையும் என்ற தலைப்பில் பேசிய சின்னம்மாள் , தேசிய கீதத்தின் சிறப்பு தொடர்பாக பேசிய மகாலெட்சுமி, கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிய சக்திவேல்,ஐயப்பன்,சபரி,விக்னேஷ் ,ரஞ்சித்
ஆகியோர் பரிசுகள் பெற்றதற்கு பள்ளியில் நடைபெற்ற
விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் நகராட்சியில் பலர்
முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக
தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நகராட்சி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பரிசுகளை வழங்கினார்.உடன் நகராட்சி பொறியாளர் ஜெயபால்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டை நகராட்சியில் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .
நிகழ்வில் பள்ளி ஆசிரியர் முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.இப்பள்ளி மாணவர்கள் தேவகோட்டை நகராட்சி சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆங்கிலத்தில் தேசிய புரட்சிகள் தொடர்பாக பேசிய கார்த்திகேயன்,வந்தே மாதரம் பாரதியும் நாட்டு விடுதலையும் என்ற தலைப்பில் பேசிய சின்னம்மாள் , தேசிய கீதத்தின் சிறப்பு தொடர்பாக பேசிய மகாலெட்சுமி, கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிய சக்திவேல்,ஐயப்பன்,சபரி,விக்னேஷ்
படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நகராட்சி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பரிசுகளை வழங்கினார்.உடன் நகராட்சி பொறியாளர் ஜெயபால்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment