சூர்ய பிரகாஷ் - 71
காவியா - 60
ஐஸ்வர்யா - 50
காயத்ரி - 56
வெங்கட்ராமன் - 55
நித்ய கல்யாணி - 30
சின்னம்மாள் – 30
இது என்ன மதிப்பெண்களா?
இல்லை.
டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்கள் வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு
ஏற்படுத்தி ,துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் கொடுத்து படிக்க செய்து அதற்கு
கையெழுத்தும் பெற்று வந்துள்ளனர்.அவர்கள் பொது மக்களிடம் கொடுத்து படிக்க செய்த
மக்களின் எண்ணிகை தான் மேலே உள்ள எண்கள் ஆகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்த வாரத்தில் நடைபெற்ற டெங்கு
விழிப்புணர்வு முகாமின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளின் சுற்றி
உள்ளவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை
ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில்
வலியுறுத்தினார்கள்.அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் அவர்கள் வீடுகளின் அருகே உள்ள
மக்களிடம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.அனைத்து மாணவர்களும்
குறைந்தது 20 பேரிடமும்,அதிகபட்சமாக
சூரிய பிரகாஷ் என்கிற மாணவர் 71 பேரிடமும் காண்பித்து
விழிப்புணர்வை ஏறபடுத்தி உள்ளார்.அதிகமான பொதுமக்களை சந்தித்து விளக்கம் அளித்த
மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.சிறு வயதில்
முதல்,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏறபடுத்தி உள்ளதை பகுதி
மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment