புதிய மாணவ முதலமைச்சர்,துணைமுதல்வர் பதவியேற்பு
மாணவ சட்டமன்றம் பதவியேற்பு விழா
புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு
விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான தேர்தல் வாக்குச்சாவடி அமைத்து ஒட்டு போடப்பட்டு ,கையில் மை வைத்து ,வாக்கு பதிவு நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக மாணவ சட்டமன்ற முதலமைச்சர் உட்பட மாணவ அமைச்சர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ,பேராசிரியர் பாகை கண்ணதாசன் ஆகியோர் புதிய மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.புதிய தலைவராக அஜய் பிரகாஷும்,துணை தலைவராக காயத்ரியும்,கல்வி அமைச்சராக கார்த்திகேயனும்,வேளாண் துறை அமைச்சராக ராஜேஷும்,மக்கள் தொடர்பு துறை அமைச்சராக விக்னேஷும்,உணவு துறை அமைச்சராக ராஜேஷும்,சுகாதார துறை அமைச்சராக சபரியும் ,பாதுகாப்பு துறை அமைச்சராக ஜெனிபரும்,அறிவியல் மேம்பாட்டு துறை அமைச்சராக நந்தகுமாரும் பதவியேற்று கொண்டனர்.மாணவர்கள் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.நிறைவாக பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்து மீனாள்,ஸ்ரீதர்,கருப்பையா ,சோமசுந்தரம்,செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து பதவியேற்பு விழா நடைபெற்றது.

No comments:
Post a Comment