Friday, 9 June 2017

முகநூலில் (FACEBOOK) தயாரிப்பு,நிகழ்ச்சி நிருவாக பிரிவில் அமெரிக்காவில் பணியாற்றும் v.ராம் வள்ளியப்பன் தனது குடும்பத்தினருடன் பள்ளியை பாராட்ட நேரில் வந்த அமெரிக்க வாழ் இந்தியர் .




                    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு பள்ளியின் செயல்பாடுகளை ஊடகங்களின் வாயிலாக பார்த்து ,படித்து பள்ளியை நேரில் பார்த்து செயல்பாடுகளை கேட்டு பாராட்டுவதற்காக முகநூலில் (FACEBOOK) தயாரிப்பு,நிகழ்ச்சி நிருவாக பிரிவில் அமெரிக்காவில் பணியாற்றும் v.ராம் வள்ளியப்பன் தனது தாயார்,தந்தை மற்றும் அமெரிக்காவில் படித்து வரும் தனது மகள் மேரா ,மகன் சிவா ஆகியோருடன் வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியின் செயல்பாடுகள் பற்றி விரிவாக பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்தி கொண்டனர். பள்ளிக்கு பாராட்டும் தெரிவித்தனர்.அமெரிக்காவில் வாழும் திரு ராம் வள்ளியப்பன் அவர்கள் விடுமுறையில் தமிழகத்துக்கு தற்போது வந்துள்ள நிலையில் அவர்கள் தாயாரிடம் கல்வி தொடர்பாக புதிய அணுகுமுறை உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று சொன்ன உடன் அவர்கள் தாயார் அடிக்கடி  பல்வேறு சமுதாய நோக்கிலான செயல்பாடுகளை செய்துவரும் (ஊடகங்களின் வாயிலாக படித்துள்ளார் ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு செல்லலாம்   என்று கூறிய உடன் பள்ளியினை பார்வையிட்டு சில தகவல்களை கல்வி தொடர்பாக  விரிவாக கேட்டு ,பள்ளியினை பாராட்டி சென்றனர். அமெரிக்காவில் இருந்தாலும் ,விடுமுறையில் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் கல்வி தொடர்பாக யோசித்து பள்ளியினை பார்வையிட்டு பாராட்டுக்களை சொன்னதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நன்றி தெரிவித்தார்.










 

No comments:

Post a Comment