Thursday, 8 June 2017

பள்ளியில்  தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் முன்னிலையில் சேக்கிழார் விழா குழுவின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 




    தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வு மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நிகழ்வில் பங்கு கொண்டு பெரியபுராணத்தில் உள்ள 4286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  13 பேரை ஒரு ஆண்டு முழுவதும் பாடல்கள் பாடுவதற்கு ஊக்கப்படுத்தியும்,பள்ளி விடுமுறை காலத்திலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி இந்நிகழ்வில் கலந்து கொள்ள செய்ததற்காகவும்,இந்நிகழ்வில் ஆசிரியர்கள் தொடர்ந்து 4 நாட்களும் பங்கு கொண்டதற்காகவும்  பள்ளி தலைமை ஆசிரியருக்கு   சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம்  பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தினார்.
                   விழாவில் சேக்கிழார் விழா குழு செயலர் பேரா .சபா.அருணாச்சலம்  பேசும்போது,  சேக்கிழார் விழாவின் நிகழ்வுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  பெரியபுராணம் படிக்க வரும்  மாணவர்களுக்கும்,பெரியோர்களுக்கும் காலை உணவு வழங்கினோம்.அப்போது பள்ளியின் ஆசிரியர்கள் ,சத்துணவு ஊழியர்கள் அனைவரும் பள்ளி கோடை விடுமுறையிலும் பள்ளிக்கு காலையில் வெள்ளனாகவே வந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.எங்களுக்கு மிகுந்த மகிச்சியாக இருந்தது.மேலும் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நான்கு  மணி நேரம் அமர்ந்து பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.மூன்று மணி நேரம்,நான்கு மணி நேரம் இந்த சிறு வயதில் மாணவர்கள் அமர்ந்து இருந்தது இவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றிகளை அடைவார்கள் என்பதை எடுத்து காட்டியது.எங்களின் இந்த ஆண்டு விழாவுக்கு மிக உதவியாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.





No comments:

Post a Comment