Sunday, 18 June 2017

பள்ளியில்   யோகா பயிற்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.



   பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா மாணவர்களுக்கு யோகாசனம் தொடர்பான யமம்,நியமம்,ஆசனம்,பிரணாயாமம் ,ப்ரத்யாஹாரம்,தாரணம் ,தியானம்,சமாதி என எட்டு அங்கங்களையும் அது தொடர்பான உட்கட்டாசனம்,வீரபத்ராசனம்,அர்த்த புஜங்காசனம்,தனுராசனம் பயிற்சிகளும்,குழு ஆசனங்களும் கற்றுகொடுத்தார்.மாணவர்கள்  அனைவரும் ஆர்வமுடன் யோகா தொடர்பான தகவல்களை கேள்விகளாக கேட்டு கற்றுக்கொண்டனர்.பயிற்சி நிறைவாக ஆசிரியை முத்து மீனாள்   நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் யோகா பயிற்சிகள் மற்றும் குழு ஆசனங்கள் நடைபெற்றது.

No comments:

Post a Comment