Tuesday, 27 June 2017


ஆங்கிலம் எளிதாக பேச வேண்டுமா? தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசியுங்கள்
மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்றுனர் தகவல்





தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம் எளிதாக கற்பதற்கான பயிலரங்கு நடைபெற்றது .
               பயிலரங்கிற்கு வந்தவர்களை மாணவர் ராஜேஷ்   வரவேற்றார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.மலேசியா நாட்டை சார்ந்த நல்ல பெருமாள் ராமநாதன் மாணவர்களிடம் ஆங்கிலம் எளிதாக பேசுவது எப்படி என்று கூறுகையில் , முதலில் ஆங்கிலம் கேட்க பழக வேண்டும்.கேட்பது என்பது முக்கியமானது.காதல் ஆங்கில வார்த்தைகளை நன்றாக விளங்கும் வரை கேட்க வேண்டும்.கேட்பது என்பது ஓதும் கலை ஆகும்.ஓதுவது என்பது படிப்பது.நீங்கள் தினமும் 60 நிமிடம் ஆங்கிலத்தை  தொடர்ந்து 90 நாட்கள் வாசித்தால் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை காணலாம்.வாசித்தல் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.ஆரம்பம் அழகாக இருந்தால் முடிவும் அழகாக இருக்கும்.முயற்சித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ரீட் என்கிற  ஆங்கில வார்த்தையில்   4 எழுத்துக்கள் உள்ளன.இதையே மலேசியாவில் பாஷா என்றும்,சீனாவில் டோசு என்றும்,ஜப்பானில் யோமா என்றும்,அராபிக்கில் இகுரா என்றும் என்றும்,தமிழில் வாசி என்றும் சொல்கின்றனர்.இது அனைத்து மொழிகளிலும் 4 எழுத்துக்களில் உள்ளது.Read (ஆங்கிலம் ) , Vasi(தமிழ் ),Baca(மலேசியா ),Dozu (சீனா ),Yoma ( ஜப்பான் ),Iqra (அராபிக்) என 4 எழுத்துக்களில் வாசித்தல் என்பது ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தை எளிதாக பேச தினமும் வாசிக்க வேண்டும் என்பதை தான் அனைத்து மொழிகளிலும் சொல்லப்பட்டுள்ளது.எனது ஜீவன் தமிழ்.எனது உடல் ஆங்கிலம்.உடலை பேண ஜீவனை காப்பாற்றுவேன்.ஆங்கிலம் பேசுவதும்,எழுதுவதும் எளிது.நன்றாக வாசிப்பவர்கள் அழகாக  எழுதுவார்கள். இன்று நன்றாக வாசிப்பவர்கள் நாளை நல்ல தலைவன் ஆவர்கள் இவ்வாறு பேசினார்.
               மாணவர்கள் வெங்கட்ராமன்,ஜெனிபர்,காயத்ரி,சின்னம்மாள்,காவியா,திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,ராஜேஸ்வரி,சத்யா,அனுசியா,நித்யகல்யாணி,ஐயப்பன்,ரஞ்சித்,ஈஸ்வரன்,கிஷோர்,திவான்,விக்னேஷ்,மாதவன் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக மாணவி உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம் எளிதாக கற்பதற்கான பயிலரங்கு நடைபெற்றது .பயிலரங்கில் மலேசிய நாட்டை சார்ந்த ஆங்கில பயிற்றுனர் நல்ல பெருமாள் ராமநாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

No comments:

Post a Comment