Tuesday, 14 June 2016

இரத்தம் சுழல்வதர்க்கே , சுழற்றிடுவீர் இரத்த தானத்தின் மூலம் 

பள்ளி மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் பேச்சு 


சர்வதேச குருதி கொடையாளர் விழிப்புணர்வு முகாம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச குருதி கொடையாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



                                      முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் சிறப்புரை வழங்கி பேசுகையில்,நீங்கள் பள்ளிகளில் போட்டிகளில் கலந்து கொண்டு பெறும் சான்றிதழ்கள் அறிவை பயன்படுத்தி பெறுபவை.18 வயதுக்கு பிறகு இரத்தத்தை தானமாக கொடுத்து பெறும் சான்றிதழ் இதயத்திற்க்கான சான்றிதழ் ஆகும்.இரத்தம் சுழல்வதர்க்கே , சுழற்றிடுவீர் இரத்த தானத்தின் மூலம் என்றார்.இரத்த தானம் செய்வதால் இரத்த அழுத்த நோய் உட்பட இதயத்தை பாதிக்கிற பெரும்பாலான நோய்கள் தாக்காது.ஆரோக்கியமான மனிதனுக்கு 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உடலில் உள்ளது.1லிட்டர் அதிகமாகவே நம் உடலில் ரத்தம் உள்ளது.300 முதல் 350 மில்லி லிட்டர் ரத்தம் தானமாக வழங்கலாம்.2 வாரத்தில் இரத்தம் ஊறிவிடும்.3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்யலாம்.5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் அளிக்க போதுமான நேரமாகும்.18 வயது முதல் 70 வயது வரை ஆரோக்கியமாக உள்ள அனைவரும் ரத்தம் வழங்கலாம்.ரத்தம் தானமாக வழங்குவதால் நாம் இன்னொருவருக்கு வாழும்போதே உயிர் கொடுக்கிறோம்.இந்த க்ருப்க்குதான் இந்த ரத்தம் என்பது இல்லை.இப்போது புதிய விதமாக எந்த குருப் ரத்தத்தையும் எடுத்து அதில் சீரம் என்கிற பகுதியை பிரித்து அதனை மற்ற குருப் இரத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றலாம் என்றார்.உங்கள் வீடுகளிலும்,உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் சொல்லி அனைவரையும் ரத்தம் தானமாக வழங்க மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வு கொடுங்கள்.நீங்களும் 18 வயதுக்கு பிறகு ரத்தத்தை தானமாக கொடுங்கள் என்று பேசினார்.
                                முகாமில் மாணவி பரமேஸ்வரி ஆட்டு ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்த இயலுமா ? என கேட்டார்.அதற்கு முதல்வர் ஆட்டின் ரத்தம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றார்.மாணவிகள் தனலெட்சுமி,காயத்ரி,ஜெனிபர் ,அபிநயா மாணவர்கள் ஜீவா,ஜெகதீஸ்வரன்,செந்தில் உட்பட பல மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச குருதி கொடையாளர் விழிப்புணர்வு முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளனர்.




No comments:

Post a Comment